பக்கம்:திராவிட இயக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


________________

49 to get their right. இங்கே அந்த மாதிரியான வேற்றுமை இல்லாமல், பிறவி அடிப்படையிலான வேற்றுமை வேரூன்றி இருக்கிற காரணத்தால் உரிமையைக் கேட்க முடியவில்லை. ஆனால் இந்தியாவிலோ இந்து மதத்தினர்களின் செய்கையாலும், தொழிலாலும் உயர்வு, தாழ்வு ஏற்படாமல், பிறப்பினால் மட்டுமே உயர்வு, தாழ்வு ஏற்பட்டிருக்கிறது. அது மனு தருமத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. பிராமணன் எந்தத் தவறான காரியத்திலே ஈடுபட்டு, பழிக்குரிய செயல்கள் செய்து, இழிமகனாகக் கருதப்பட்டாலுங்கூடப் பிராமணன் பிராமணனே என்று. அதற்கு முன்னர் பிராமணர்கள் ஒழுக்கச் சீலர்களாக இருந்தால்தான் பிராமணர் ஆவர் என்பதாகத் தொடக்கக் காலத்திலே கூறப்பட்டது, அப்படிக் கூறிப் பிராமணர்களின் ஆதிக்கத்தைக் காக்க முடியாது என்பதைக் கண்டதால், கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, எந்தக் கேவலமான தொழிலில் ஈடுபட்டாலும் பிராமணன் பிராமணனே என்றனர். பிராமணர் அல்லாதார் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், கற்றவராக இருந்தாலும், திறமையுள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் இருந்தாலும் எந்தக் காலத்திலேயும் அவருடைய பிறவிச் சாதியால் வரும் இழிவை மாற்றிக் கொள்ள இயலாது. இழிவும் பழியும் உற்றவனாயினும் பிராமணன் உயர்சாதியே என்கின்றனர். இந்த நாட்டில் தொழிலால், பண்பால், உயர்வு தாழ்வு ஏற்படாமல், பிறப்பினால் மட்டும் உயர்வு தாழ்வு ஏற்பட்டிருக்கிறது. உயர்ந்த சாதியில் பிறந்த ஒருவன் என்ன கேவலமான தொழிலைச் செய்தாலும் தனது பிறப்புயர்வின் நிமித்தம் எல்லா உரிமைகளையும், மேம்பாடுகளையும் அடையக் கூடியவனாகிறான். தாழ்ந்த சாதியில் பிறந்த ஒருவர் கல்வி, ஒழுக்கம், பொருள் முதலியவற்றில் மேம்பட்டிருந்து, அவற்றிற்கிணங்க உயர்ந்த தொழிலைச்