பக்கம்:திராவிட இயக்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


________________

52 பொருள் அடிமை என்றும், ஆகவே சூத்திரர்களாகிய அடிமைகள் தங்களிலும் உயர்ந்த சாதிப் பிராமணர்களுக்கு எப்போதும் தொண்டு செய்ய வேண்டியதே கடமை என்றும் கூறி, சூத்திரர் கல்வி, ஞானம் முதலிய விஷயங்களில் விருத்தியடைய ஒட்டாதபடித் தடை செய்யப்பட்டிருக் கிறார்கள். கல்வியில் வளர்ச்சியடைய அனுமதி இல்லை. உயர்நீதி மன்றத்திலேயே சூத்திரன் ஒருவன் சந்நியாசி ஆனது குறித்து ஒரு வழக்கு எழுந்தபோது, அந்த வழக்கில் "சந்நியாசியாகிற உரிமை சூத்திரனுக்குக் கிடையாது, பிராமணன் மட்டும்தான் சன்னியாசியாகலாம்” என்று உயர் 'நீதிமன்றத்திலேயே தீர்ப்பு கூறப்பட்டது. முழு "ஒரு பிராமணர் அல்லாதவருக்குத் தமது மனைவியிடம் ஆண் மகவு ஏற்படாமல் தமது காமக் கிழத்தியாகிய ஒரு பரத்தையிடம் ஓர் ஆண் மகவு ஏற்படக்கூடியதாக இருந்தால், அவருடைய சொத்து முழுமைக்கும் தாசி மகனே உரிமையுடையவனாவான் என்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளார்கள். ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட சட்டம் ஒன்றும் இல்லை". பிராமணனுக்குப் பரத்தையிடம் ஆண் மகவு பிறந்தாலும் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியாது. கிணறு, குளம், மருத்துவமனை, கோவில் முதலிய பொது இடங்களில் பிராமணர்கள் தங்கள் தருமப்படி ஏற்கெனவே தாங்கள் உடுத்திய உடைகளைத்தான் மற்றவர்கட்குக் கொடுப்பார்கள். ஆனால் பிராமணன் மற்ற வகுப்பார் வீட்டிலே வேலை செய்தாலும் அவனுக்குப் புது உடைதான் கொடுப்பார்கள். ஏற்கெனவே கெட்டி வெளுத்த உடையைக் கொடுக்கமாட்டார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியில் சிறையிலே கூட பிராமணர்கட்குத் தனி உணவு பிராமணர் சமையல் ஏற்பாடே இருந்தது. ஆக இவையெல்லாம் பிராமணர் அல்லாத மற்றவர்களுடைய மனங்களை எவ்வளவு