பக்கம்:திராவிட இயக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


________________

53 புண்படுத்தியிருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். "பண்டைய காலத்தில் நம்முடைய தென்னிந்தியாவில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், சாத்தனார் இளங்கோவடிகள், நக்கீரர், கம்பன், புகழேந்தி, சேக்கிழார் போன்ற புலவர்கள், பெருங்கவிஞர்களாகவும் விளங்கி இருந்தது யாவரும் தெரிந்ததே. இப்படிப்பட்டவர்களை முன்னோர்களாகக் கொண்ட சந்ததியாரைச் சூத்திரர் என்று அழைக்கிறார்கள்." திருவள்ளுவரின் பரம்பரையினர் சூத்திரர், சேர-சோழ-பாண்டிய வழியினர் சங்கப் புலவர்கள் ஆழ்வார்கள் வழியினர் எல்லாம் வழியினர் - நாயன்மார் - - சூத்திரர். என்ன பொருள்? ஒரு மதிப்பிற்குரிய பாரம்பரியம் உள்ள மக்கள் இழிமக்களாக இந்த நாட்டிலே ஆக்கப்பட்டார்களே ஏன்? என்று அவர் கேட்கிறார். "தென்னாட்டுத் திராவிட மன்னர்களால் சைவ, வைணவ மடங்களும் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்குப் போதுமான சொத்துக்கள் விடப்பட்டு, சைவ, வைணவப் பெரியோர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்காலப் பிராமணர்கள்) தந்திரமாகத் தங்களுடைய செல்வாக்கால் Scheme Suit என்ற பெயரில்,நீதிமன்றத்திலே ஒரு வழக்குத் தொடர்ந்து இராமேசுவரம், குன்றக்குடி, வைத்தீசுவரன் கோவில் போன்ற கோயில்களைத் தங்களின் ஆளுகையின் கீழ், கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவரையில் மடாதிபதிகளாக இருந்த மற்றவர்களிடம் அதன் ஆளுகை இருந்தது. திருக்கோயிலில் நைவேத்தியம் பிராமணரே செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்து அவர்கள் உரிமை கொண்டனர். "அரசாங்கம் கோவில் முதலிய மத விஷயங்களில் பிரவேசிக்கவில்லை என்று சொல்லியிருந்தும்,