பக்கம்:திராவிட இயக்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


________________

55 அடையக்கூடிய சகல வாய்ப்புக்களையும் அடையும்படியாகச் செய்திருக்கிறார்கள்". சிவன் கோவிலுக்குச் செல்லும் சைவரான பெரியவர் சொல்கிறார், கிறித்தவப் பாதிரியார்களே நம் மக்களை மனிதர்களாக வாழவைத்தனர் என்று. இந்நாட்டிற்கு ஆங்கிலேயர் வருவதற்கு முன்னும், பின்னும் கிறித்தவர்களும், முகமதியர்களும், பிராமணரல்லாதவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் தங்கள் மதத்தில் சேர்த்து, சமத்துவ முடையவர்களாக்கி, சகல உரிமைகளையும் பெறச் செய்திருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் தியாகராயர் நீதிக்கட்சியைத் தோற்றுவித்தார். இந்தப் பின்னணியை நினைவூட்டுவதற்குக் காரணம் இதுவே. தியாகராயர் சொல்கிறார்: "திராவிடச் சிந்தனைகளின் தலைவரான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் ஆகியோர் ஆண்டவனின் தலையிலிருந்து தாம் பிறந்ததாக உரிமை கொண்டாடவில்லை. பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன்தான் ஞானியாகிறான் என்பதற்கு மாறாக, இவர்களெல்லாம் பிரம்மா முகத்தில் இருந்து பிறக்கவில்லை. நமது நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிறப்பினால் உயர்வு கருதியதில்லை. நம்மாழ்வார், பெரியாழ்வார், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் உட்பட எவரும் பிறவி சாதி உயர்வைக் கருதியவர்கள் அல்லர். இந்தப் பிறவி சாதி வித்தியாசங்களை ஆரியர்தாம் தென்னகத்தில் அறிமுகம் செய்ததோடு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்திய வர்ணாசிரம தர்மமாகப் பரப்பி நிலைநிறுத்தினார்கள்". உண்மையில் தமிழ்நாட்டிலேயே 300 குலம் இருக்கிறது. குலம் என்றால் அவன் பிறந்த குடும்ப வழி, அவன் வழியைச் சேர்ந்தவர்கள் தனிக்கூட்டம் என்று பொருள். அவனைவிட மற்றொருவன் உயர்வு, உயர்ந்த சாதி என்று சொல்ல இடமில்லை. மனு தரும சாதி நாகரிகமே நமது நாட்டில் படிப்பறிவில்லாத மடமை நிலைக்க ஏதுவாக அமைந்தது.