பக்கம்:திராவிட இயக்கம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


________________

5 நாகரிகப் பெருமை, கலைகளின் தனிச் சிறப்பு ஆகியவை மேல்நாட்டு ஆய்வு அறிஞர்களின் நூல்களால் வெளிப்பட்டதால் அறிஞர்களிடம் ஓர் விழிப்புணர்வும் ஏற்படலாயின. த ன்னக தெளிவும் அதன் பயனாகவே சமுதாய உரிமைக்கு வாதிடும் திராவிட இயக்கம் உருக்கொண்டது. திராவிட இயக்கத்தின் வேர்களாக விளங்கியவர்கள் கண்ட எதிர்ப்புகள் பல; போராட்டங்கள் பல; ஏற்ற தியாகங்கள் இணையற்றவை. அவர்தம் வழியில் சுடர் விட்டு ஒளிர்ந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஊட்டிய உணர்வுடன், அறிஞர் அண்ணா வகுத்த நெறியில் கடந்த அறுபது ஆண்டுகளாக, இனமான உணர்வு போற்றும் இலட்சிய வீரராக நடைபோடுபவர் இந்நாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன். அவரது அறிவார்ந்த பேச்சாற்றலை அவரது உரையைப் பலகாலும் கேட்டுள்ள தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவியுடன், கடந்த 27-04-98 ஆம் நாள், அதன் துணைவேந்தர் டாக்டர் பி.மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிட இயக்கக் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து, பேராசிரியர் ஆற்றிய வரலாற்றுத் தெளிவளிக்கும் உரையினை இந்நூல் வடிவில் வெளியிடுவதன் மூலம், தமிழ் இனத்துக்கு ஓர் கடமையாற்றும் வாய்ப்புப் பெற்றது குறித்து மகிழ்கிறோம். நன்றி. பூம்புகார் பதிப்பகம் சென்னை - 600 108.