பக்கம்:திராவிட இயக்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


________________

59 வேட்கையுடன் முயல்கிறார்கள். வைதிகப் பார்ப்பனர் ஆதிக்கம் பெறவே, பல்வேறு அநீதிகளை ஏற்படுத்தும் வருணாசிரம தருமத்தை நாட்டினார்கள். அந்தத் தருமந்தான் படிப்பறிவில்லாத மக்களிடம் மடமையை நிலைநாட்டியது. அதன் மீதுதான் பிராமண ஏகபோகச் செல்வாக்கு எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தச் சமுதாயக் கொடுங் கோன்மையை எதிர்த்திட ஒரு புரட்சி ஏற்படா விடினும், ஓர் அறிவு விளக்க - வழி எதிர்ப்பினைத் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. 2400 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தரின் அறிவு மறுமலர்ச்சி சமயம், அனைத்து வகுப்பாரையும் சமத்துவத்துடன் ஒன்றுபடுத்த முனைந்தது. ஆனால், வருணாசிரம தருமம் மறுபடியும் குப்தர் கால ஆட்சியில் செல்வாக்குப் பெற்றதால், புத்தர் நோக்கம் வெற்றி பெறவில்லை. அந்தப் புத்தரின் சிந்தனை அலை வளர்ந்து விடாமல் தடுக்கவும், வருண முறை மக்களிடம் செல்வாக்குப் பெறவும் ஏதுவாகப் புத்தரையே அவதாரமாக்கி விட்டார்கள். பத்து அவதாரத்திலே புத்த அவதாரம் ஒன்று என்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துப் பஞ்சாங்கத்திலே புத்தர் படம் வெளியிடப்பட்டிருந்தது. புத்த மதம் ஒரு தனி மதம், இந்து மதமன்று என்று நிலைநாட்ட அவர்கள் நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. 2400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புத்தருக்கே இந்த நிலை. பிராமணராக இருந்தாலும் வைணவ இராமானுசாச்சாரியார் கோவில் அமைப்பில், பிராமண வைதிக கொடுங்கோன்மையைக் குறைப்பதற்கு முயன்றார். மதக் இராமானுசர் காலத்திலே ஆதிதிராவிடர்களையும் தம்மைப் பின்பற்றுவோராகச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் திருக்குலத்தார் என்று அழைத்தார். ஆதிசங்கரர் போன்ற