பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நண்பனா?

ன்புள்ள சேகர்! என் திருமண அழைப்புக் கிடைத்திருக்கும் உனக்கு. நிச்சயம் வருவாய் என்று எதிர்ப்பார்த்தேன்; ஏமாற்றமடைந்தேன். உன் திருமணத்திற்கு நான் வரவில்லை என்பதற்குப் பழிவாங்கி விட்டாய். அதில் என் குற்றம் ஒன்றுமில்லை என்பதை அறிவாய். ஆனால் உன் மணவிழா நடைபெற்று ஐந்தாண்டுக் காலம் ஓடிவிட்ட போதிலும், இன்னும் நான் உன்னைச் சந்தித்து மண வாழ்த்துக் கூறாதது என் தவறுதான். சூழ்நிலைகள் சதி செய்து விட்டன. வயிற்றுப் பிழைப்பு உன்னையும் என்னையும் நெடுந்தொலைவுக்குப் பிரித்து விட்டது. டெல்லி மாநகரில் உத்தியோகம் பார்க்கும் ஒரு பெண்ணையே நீ மணந்து கொண்டதால் பொருளாதாரத் துறையில் குடும்பம் ஆட்டங்கொடுக்காமல் ஓடிக்கொண்டிருக்கும். உனக்கென்னப்பா, கொடுத்து வைத்தவன். எனக்குக் கிடைத்திருப்பவளும் டெல்லியில் வாழ்ந்தவள் தான். சென்னையில் கம்பெனியொன்றில் வேலை பார்க்கிறாள். அவள் வாயிலாக மாதம் முன்னூறு ரூபாய் கிடைக்கும். என்னடா. பயல் பரவாயில்லையே என்று சொல்லத் தோன்றுகிறதா உனக்கு?

டே, சேகர்! தம்பதிகள் படமாவது அனுப்பி வையேன்டா! இத்தனை நாள் சும்மாவா இருந்திருப்பாய்? ‘இருமலர் ஓர் அரும்பு’ என்ற தலைப்பிட்டு