க. அன்பழகன் எம்.ஏ., தலைமைச் செயலகம்
கல்வி அமைச்சர் சென்னை - 600 009.
அணிந்துரை
மனிதனின் எண்ணத்தின் தெளிந்த முதல் வடிவம் பேச்சு, சொல், மொழி. எண்ணங்களின் தொடர்ச்சியால்
உருவாகும் கருத்தின் வடிவமே இலக்கியம். இலக்கியம் கதையாக, பாட்டாக, கவிதையாக, நாடகமாக வடிவம் பெறும்.
அவற்றுள் தொன்னாள் முதல் மக்களின் வாய்மொழியாகவே வடிவம்கொண்டு வளர்ந்து பரவியது கதையே. பாட்டனோ பாட்டியோ பேரக்குழந்தைகட்குச் சொல்லும் முறையில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வழங்கி வருவது கதை. அவற்றுள் பல காட்டு விலங்குகள், பறவைகள், மரங்கள், ஆறுகள் முதலானவை ஒன்றுடன் ஒன்று பேசுவதாகக் கற்பித்து, ஒன்றை ஒன்று ஏமாற்றியது, வென்றது, விரட்டியது போன்று முடிவு கூறிக் குழந்தை மனம் களிக்கச் செய்யும் இயல்பின. இவ்வகையான கதைகளே பஞ்சதந்திரக் கதைகளாக வழங்குகின்றன.
பேய், பூதம், பிசாசு, இராக்கதன் போன்ற கற்பனைகளை வைத்து வழங்கிய கதைகளும் பல
1