பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சிறுகதைகள்


மொழிகள் ஆஸ்பத்திரியின் அருகேயுள்ள வினைதீர்த்த ஆண்டவன் கோயில் சுவரில் மோதி எதிரொலித்தன.

‘கிர்’ ரென்று ஒரு மோட்டார் கார் வந்து நின்றது. “டாக்டர் சார்.... பண்ணையிலே அய்யாவுக்குத் தலைவலியாம். அவசரமாகக் கூப்பிட்டு வரச்சொன்னார்”

டிரைவர் இதைச் சொல்லி முடித்தான்.

“கம்பவுண்டர்! கைப்பெட்டி இருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டே காரில் ஏறி அமர்ந்து கொண்டார் டாக்டர். “இருக்கிறது”— நாயுடுகாரு தலையசைத்துக் கொண்டே முன்சீட்டில் உட்கார்ந்தார். “ரொம்ப சீரியஸோ?” பிச்சுமூர்த்தி டிரைவரிடம் வெகு அவசரமாகப் பதிலை எதிர்பார்த்தார். மோட்டார் கார் பறந்துவிட்டது.

இங்கே வாயிற்படியைப் பிடித்துக்கொண்டு வேதனையால் வாடிய பறைச்சி, “ஆ.. அம்மாடி... அய்யோ கடவுளே...” சத்தம் ஓயவில்லை. ஆனால் ‘அந்த’ வார்த்தைகள் அவள் நெஞ்சத்தில் சவுக்கடிகளாக இன்னும் விழுந்து கொண்டிருந்தன. சம்மட்டியால் தாக்கப்பட்ட வைரத்தைப்போல அவள் நினைவு சிதறியது.

கம்பவுண்டர் கிண்டலாகக்கேட்ட கேள்வி “உன் ஆம்படையான் எங்கே?”... “ஆம்படையா...” அவதி தாங்கமாட்டாமல் அனலிடைப் புழுப்போல் துடித்த அவள் வாய் இந்த வார்த்தையை முணுமுணுத்தது; ஆனால் சற்று ஆத்திரமாக.

“ஆம்படையான்” — அழவில்லை அவள்! அப்படியே மரமாக நின்றாள். அவள் இதயத்தின் முன் ஒரு ஏடு புரண்டது. மூன்று வருட வரலாறு!