பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

101



கருப்பாயி காத்தமுத்துவின் பெண்சாதி. காத்தமுத்து சோலையூர்க் கிராமத்துப் பெரிய பண்ணையில் ஒரு பண்ணையாள். பண்ணைக்கார அண்ணாமலை முதலியார் ‘தருமதுரை’ என்று பெயர் வாங்கின ஆசாமி. கோயில்கள் கட்டுவது, கும்பாபிஷேகங்கள் செய்வது என்றால் அமோகப் பிரியமுள்ளவர் அண்ணாமலை முதலியார். “அடடா எத்தனை தர்மம்? எத்தனை சத்திரம்? தர்மமே உருவாக வந்த உத்தமரய்யா அவர்!” — பண்ணை முதலாளியின் பகுதி மனையில் குடியிருக்கும் பார்த்தசாரதி அய்யங்காரின் நாமாவளி இது.

“அண்ணாமலை முதலியார் கட்டிய கோயிலய்யா அது. அவர் ஆட்டினபடி ஆடணுமாக்கும்; ஆமா! ஆலயப் பிரவேசமாவது மண்ணாவது! பள்ளுப் பறைகளை உள்ளே விடறதுக்கு. அவர் சம்மதிக்க மாட்டாருதான். அக்கிரம விஷயத்திலே அவரு இணங்கமாட்டாராக்கும், தெரியுமா?” பண்ணையில் கணக்குவேலை பார்க்கும் கண்ணாயிரம் பிள்ளையின் கர்ஜனை இது!

மூன்று வருடங்களுக்கு முன் மூஷிக விநாயகர் கோயில் திருப்பணி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்பொழுது உலவும் ஆலயப் பிரவேச சீசனில் அதில் அரிஜனங்களை நுழைய விடுவதற்குப் பகீரதப் பிரயத்தனங்கள் நடைபெறுகின்றன.

கோயில் கட்டும்பொழுது கர்ப்பக்கிரகத்திற்கு ஏற்றப்பட்ட கருங்கல் விழுந்து கருப்பாயி புருஷன் காத்தமுத்து உயிர்விட்டான்.

உருண்டு திரண்டு ஒய்யாரமாக இருந்த காத்தமுத்து நசுங்கி நாசமானான். மகாகணபதியின் கோயிலுக்கு மண்டையைத் தேங்காயாக உடைத்து. இரத்தத்தால் முதல் கும்பாபிஷேகம் நடத்திவைத்தான். உயிருக்குயிரான கருப்பாயியை விட்டுவிட்டு அவன் ஆண்டவன் ஆலயத்திலேயே பலியானான். காத்தமுத்துவைக் காவு-