குப்பைத் தொட்டி
வீதியோரத்தில் அந்த மாடி வீட்டுக்குக் கீழேதான் நான் நீண்ட நாட்களாகத் தவம் செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைய தவம் எந்தக் கடவுளையும் வரவழைத்து அவர்களிடம் ஏதாவது அபூர்வமான வரங்கள் வாங்கவேண்டும் என்பதற்காக அல்ல! அகிலத்தைக் கட்டியாள வேண்டுமென்று அரசர்கள் பலர் தவமிருந்ததும் தன்னை அழிப்பார் யாருமிலர் என்ற நிலை ஏற்பட வேண்டுமென்று அசுரர்கள் கொடிய தவங்களை மேற்கொண்டதும், சாபங்களின் மூலம் பகைவர்களைப் பழி வாங்குகிற வரங்களைப் பெறுவதற்கு முனிவர்கள் தவத்தில் முனைந்ததும் எனக்கு நேற்றுதான் விவரமாகத் தெரிந்தது. தவம் என்றால் ஒரே நினைவுடன் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து அன்னஆகாரமின்றி ஆண்டவனைக் காணத்துடிப்பது; அவன் வந்தபிறகு தேவையைக் கேட்பது. என்னைப் பொருத்த வரையில் ஒரேஇடத்தில் அசையாமல் அமர்ந்து இருப்பது ஒன்றைத் தவிர, தவத்துக்குரிய வேறு அடையாடங்கள் எதுவுமே இல்லை.
அப்படித் தவத்தில் ஈடுபட்டவர்களேகூட ஒரே நிலையில் நினைவைச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருக்-
கு—2