12
சிறுகதைகள்
ஜாத மலர்கள்! தழுவத்துடிக்கும் பருவக்கொடிகள்! அவர்தம் இளமையின் பூரிப்பு இறைவனையே தூண்டில் போட்டு இழுத்தது. ஒன்றா, இரண்டா, ஓராயிரம் பூஜை மலர்களைக் கசக்கி எறிந்தார்! வரம் கோரும் முனிவர்களின் பத்தினிகள்! வரம் தரவேண்டிய பரமன்! கரம் சிவக்குமட்டும் காமச்சேட்டை புரிந்தார்! இந்தக் கர்ணகடூரமான கதையைப் பஜனை மடத்துப் பாகவதர் எவ்வளவு நாசுக்காகச் சொன்னார் தெரியுமா?
தாருகாவனத்து ரிஷிபத்தினிகளுக்குப் பரமசிவன் அருள்பாலித்து ஆட்கொண்டார் என்று அவர் கூறியதைக் கேட்டு, “ஆகா! ஆகா!” என ரசனையை வெளியிட்டு விட்டுப் பிரசாதங்களை அருந்தி, இவைகளை என் வயிற்றுக்குள்ளே வீசி எறிந்துவிட்டுப் போயினர் பஜனை கோஷ்டியினர். அப்படி வீசி எறிந்த பக்தர்களில் ஒருவர், பிரசாதம் சரப்பிட இலை கிடைக்காத காரணத்தால் ஒரு புத்தகத்தின் தாள் ஒன்றை உபயோகித்தார் போலும், கசங்கிப் போய்ச் சோற்றுக்கறை படிந்த அந்தத் தாளை உற்றுப் பார்த்தேன். எனக்கே வெட்கமாக இருந்தது. ஏதோ ஒரு உணர்ச்சி என்னை வளைத்துக் கொண்டது. குப்பைத் தொட்டி என்றால் உணர்ச்சிகள் இருக்காதா என்ன? அப்படி என்ன அந்தத் தாளில் இருந்தது என்று அறிய உங்களுக்கும் ஆவல் இருக்கத்தான் செய்யும். அதையும் சொல்லிவிடுகிறேனே! குத்துவிளக்குச் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து நேரம் இரவாகத் தானிருக்குமென முடிவுகட்டி விடலாம். இரவு நேரத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை வர்ணித்து அந்த நிகழ்ச்சித் தலைவனைப் பிரார்த்தனை செய்கிறாள் ஒரு அம்மை! பெண்ணின் பிரார்த்தனையில் இரவு நேரத்து விரசங்கள் எதுவும் இருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால் நாம் ஏமாந்து விடுகிற அளவுக்கும்