16
சிறுகதைகள்
வர்கள்-விவேகத்தின் விரோதிகள் என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறது. என்னுடைய நிழலிலேயே வாழ்ந்து கொண்டிருந்த நன்றி மறந்த ஒரு மனிதனைப்பற்றி நினைத்தாலே எனக்குக் கோபம் பொங்குகிறது. எங்கிருந்தோ ஒருநாள் வந்தான். சரியாக நடக்க முடியவில்லை. உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. என்னையும்மீறி அவன்மீது ஒரே துர்நாற்றம்! போனால் போகிறது என்று சகித்துக்கொண்டு “யாரப்பா?” என்று கேட்டேன். “பார்த்தாலே தெரியவில்லை, இந்த நாட்டு மன்னர்களிலே ஒருவன்; உன் பக்கமிருந்து ராஜ்ய பரிபாலனம் செய்ய வந்திருக்கிறேன். கொஞ்சம் நிழல் கொடுப்பாயா?” என்று அவன் என்னைப் பார்த்தான். “நிழல் தருகிற அளவுக்கு நான் என்ன அவ்வளவு வளர்ந்து வளமாகவா இருக்கிறேன்; வேண்டுமானால் என் மறைவில் ஒதுங்கியிருந்து ராஜரீகம் செய்வாயாக!” என்றேன். அவனும் பத்து நாட்கள் என் மறைவிலேயே உட்கார்ந்தான்-படுத்தான்-தூங்கினான்-சாப்பிட்டான். அங்கிருந்தவாறே அவன் ‘சர்க்கார்’ நடந்தது. போகிறவர்களிடம் பல்லைக் காட்டி அவனது அரசாங்கத்திற்குத் தேவையான வரிகளைக் காசாகவோ பணமாகவோ வாங்கிக் கொண்டிருந்தான்.
பத்து நாள் எனக்கும் அவனோடு நல்ல பொழுது போயிற்று. அவன் பாடுகிற பாடுகிற சினிமாப் பாட்டுகள். நாடோடிப் பாட்டுகள் இவைகளில் நான் என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் இரவில் இந்தப் பரதேசி மகாராஜா ஒரு பெண்ணைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்தார். நான் தூங்குவதுபோல் நடித்து நடப்பவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவள் வரும்போதே “சீக்கிரம் போகணும்” என்று முனகிக் கொண்டு வந்தாள். “அட, பறக்காதே, இந்தா பணம்!” என்று ஒரு எட்டணாவை அவளிடம் கொடுத்தார்