18
சிறுகதைகள்
கூட அவரைப் பார்க்கக்கூடும். ஏனென்றால் இந்தப் பக்கம்தான் அவர் ஊர்வலம் வருகிறார்” என்று கூறிக்கொண்டே அவன் போலீசார் கொண்டுவந்த பெரிய காரில் ஏறிப்போய் விட்டான். அவன் சொன்னபடி மறுநாள்வெளிநாட்டு மந்திரி நான் இருக்கும் வீதிப்பக்கம் வந்தது உண்மைதான். ஆனால் அந்த நண்பன் மட்டும் என்னைத் திரும்ப வந்து பார்க்கவேயில்லை. இந்நாட்டு மன்னர்களிலே ஒருவனல்லவா, எந்தக் குப்பைத் தொட்டி மறைவுக்குப் போனானோ, தெரியவில்லை! நன்றி கெட்டவன்!
என்னமோ போங்கள்... சத்தற்ற என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சந்தித்தாகி விட்டது. நான் படித்த கல்யாணப் பத்திரிகைகள் எத்தனை நான் அருந்திய விருந்துகள் எத்தனை-மங்கல காரிய அழைப்புகளும் அமங்கல காரிய அழைப்புகளும் எவ்வளவு! எவ்வளவு! காதலன் காதலிகள் கிழித்துப்போட்ட திருட்டுத்தனமான கடிதங்கள் எத்தனை! நான் படித்துப் பார்த்து அவர்களை நினைத்துச் சிரித்திருக்கிறேன். ஒதுக்கப்பட்டவைகள், ஒழிக்கப்பட்டவைகள் எல்லாமே என்னுடைய இரு கரங்களால் அன்போடு வரவேற்கப்பட்டிருக்கின்றன.
எதையும் பொறுத்துக்கொண்டு புன்னகை காட்டுகிற தூய்மையான துறவிகளைவிட நான் ஒருபடி மேலான பொறுமைசாலி.
இந்த நாட்டில் எத்தனையோ மக்கள் வயிறாரச் சாப்பிடச் சோறின்றி வாடுகிறார்கள், என் வயிரோ காலியாகக்காலியாக நிரம்பிக் கொண்டேயிருக்கிறது. அய்யோ! உங்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒரு பெண் பதுங்கிப் பதுங்கி வருகிறாளே! சற்று மறைந்து கொள்ளுங்கள்! ஆம்; அவளுடைய கையில் ஒரு குழந்தை