பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழை

ழக்கம் போல் பானுவின் தள்ளு வண்டி ‘பார்க் நோக்கிப் புறப்பட்டது. பானுவின் சின்னஞ்சிறு வாயிலிருந்து சிதறிக் கொண்டேயிருக்கும் மழலை மொழிகட்குப் பதில் பேசியவாறு வண்டியைத் தள்ளிக் கொண்டு போனாள் பார்வதி. பானுவுக்கு வயது ஆறு கூட ஆகவில்லை. வீட்டில் ‘துரு துரு’ என்று சும்மாயிருப்பதில்லை, முக்கியமாக அப்பா அம்மாவைப் பேச விடுவதில்லையென்றால் பாருங்களேன். காலையிலிருந்து கிராமக் கணக்குவழக்கு, குத்தகைதார் பணம் பட்டுவாடா, கிசான் தொல்லை, வியாபாரப் பிரச்சனை இவ்வளவையும் கவனித்துவிட்டு, மாலை ஆறு மணிக்கு மேல்தான் நல்லக்கண்ணுப்பிள்ளைக்கு ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் ஒரு விநாடிகூட வீணாகப் போய்விடக் கூடாது என்பது பிள்ளையின் நோக்கம். ஆறு மணி எப்பொழுதுவரும் என்று எதிர்பார்த்திருக்கும் கருணாம்பாள்-ஆமாம் அவரது மனைவி-அந்த அம்மையாரும் அந்த ஓயா உல்லாசத்தைத்தான் விரும்பினார்கள். அவர்களின் இனிய பொழுதை, அந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளை... தொடர்ச்சி கெடும்படி நடுநடுவே அறுத்துவிடும். என்னதான் புத்திரபாசமிருந்தாலும் சற்று நேரம் யாருடைய தொந்தரவுமின்றி இருக்கத்தான் கருணாம்பாளின் மனம் விரும்பியது. அதுவுமென்ன? அந்தத் தம்பதிகள் ஏழைகளா?-- இன்பம் என்ன