பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சிறுகதைகள்



முறிந்து கிடக்கும் அந்த மரத்தடியில்... “பானு” என்று சத்தம் போட்டபடி இறங்கினார் பிள்ளை. பானு மயக்கமாய்க் கிடந்தது. தூக்கி மூர்ச்சை தெளிவித்தார். ‘அப்பா’ என்று கண் விழித்தது குழந்தை. காரில் குழந்தையோடு ஏறி உட்கார்ந்தார். கார் புறப்பட்டுவிட்டது, டாக்டர் வீட்டை நோக்கி.

மரத்தடியில் கிடந்த இன்னொரு உருவம் கண் விழித்தது. “அத்தான்...அய்யோ...” - நீண்ட பெருமூச்சு.

கண்கள் மூடிக் கொண்டன.

யார் அது?

ஏழை!