பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணடக்கம்

க்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று. தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன்மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங்கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன. புரையோடிவிட்ட புண்ணிலிருந்து கிளம்பிய துர்நாற்ற அருவிபோல் இருந்தது அந்த பக்தனின் முகக்காட்சி. “தேவீ! தேவீ!! காளிகாதேவி!” என்ற அலறல் வேறு!.

நல்ல இருட்டு! கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளம். அதன்மீது ஒரு மூங்கில் பாலம். அதிலே நிதானமின்றி பக்தன் ஓடினான். கரையோரத்துச் சுடலையிலே எரிந்து கொண்டிருந்த ஒரு பிணத்தை ஆற்றுத் தண்ணீர் இழுத்துக்கொண்டு வருகிறது. அதை பக்தன் பார்த்தான். “லோகமாதா!” என்று அலறிக்கொண்டே திரும்பினான். தீவட்டிகளோடு நாலைந்து பேர் வந்து கொண்டிருந்தனர்.ஒருவன் கையிலே கொள்ளிச்சட்டி. பிணந்தூக்கிக் கொண்டு வந்தார்கள். இது ஆற்றிலே மிதக்கும் ஈரப்பிணமல்ல; புதிய பிணம்! மூங்கில் பாலத்தில் பக்தன் நின்றான். ஒரே

கு—3