பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சிறுகதைகள்


காளியின் கண்களில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளிக் கண்ணடக்கத்தைப் பிடுங்கி எறிந்தான்!

காளியின் கண்களை பக்தன் உற்றுப் பார்த்தான்.

“இப்போது என்னைத் தெரிகிறதா, தாயே?”

“தெரிகிறது-என் மீது பிரியமுள்ள முட்டாள் என்று!”

“என்னம்மா மீண்டும் பழி சுமத்துகிறாய்? நன்றி காட்டு தாயே எனக்கு நமனுலகு செல்லும் மக்களை மீட்க அன்பு மழை கொட்டும் விழிகளைத் திறந்திருக்கிறேன் நான்!”

“விழிகளைத் திறந்தாய். ஆனால் ஒளிதர உன்னால் இயலாது! பத்து வருடமாக மூடிக்கிடந்ததால் தூர்ந்து விட்ட கிணறு போல் ஆகிவிட்டதப்பா என் கண்கள்! ஒரு ஆண்டா, இரு ஆண்டுகளா? பத்து ஆண்டுகள் அல்லவா இந்தக் கண்ணடக்கம் என் விழியை மறைத்துக் கொண்டிருந்திருக்கிறது. இனி என் கண்களுக்கு ஒளிதர, அந்த ஒளியிலே கருணை ததும்பச் செய்ய யாராலும் முடியாது! தயவு செய்து போய்விடு”

காளி அழுகுரலோடு ஆத்திரமாகப் பேசினாள்.

பக்தன் சற்று நேரம் நின்றான். காளியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். நெற்றியிலே மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருந்த குங்குமம், திருநீறு ஆகியவற்றை நன்றாக அழித்து நெற்றியைத் தூய்மைப்படுத்திக் கொண்டான். கோயிலிலிருந்து விடுபட்டு ஊரை நோக்கி ஓடினான்.

எதிரே, இரண்டு மூன்று கார்களில் டாக்டர்களும் அவர்கட்கு உதவியாளர்களும் வந்திறங்கினார்கள். ஊர் மக்கள் அனைவருக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள் அவசரமாகக் குத்தப்பட்டன. ஊருக்குத் தேவையான, உடனடி-