பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

33


யாகச் செய்ய வேண்டிய சுகாதார வேலைகளை இரவோடு இரவாக டாக்டர்கள் செய்யத் துவங்கினர். பக்தனும் அந்தப் பணியில் முன்னின்றான்.

திடீரென விழித்துக் கொண்டேன். கண் வைத்திய சாலையில் இரண்டு கண்களும் கட்டப்பட்ட நிலையில் படுத்திருப்பதை உணர்ந்தேன். எனக்குச் செய்தது போல எத்தனை ஆப்பரேஷன் செய்தாலும் அந்தக் காளிக்குக் கண் திறக்காது என்பதை எனக்கு நானே எண்ணிக் கொண்டு சிரித்துக் கொண்டேன், அந்த வேதனையான வேளையிலும்!