பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சிறுகதைகள்


அந்தத் தூங்காத வாலிபன் வந்து உட்கார்ந்தான். வந்தவன் எதிர்பாராதவிதமாக அங்கு வந்து அமரவில்லை. எல்லாப் பெட்டிகளையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாகக் கவனித்துவிட்டு கடைசியில் இங்கு வந்து ஏறிக்கொண்டான். சந்திராவின் கையிலிருந்த குழந்தை அருகிலிருந்த ஒரு கிழவியின் நரைமயிரைத் தன் தளிர்க்கரங்களால் பிடித்திழுக்கவே, கிழவி பொக்கைவாய்ச் சிரிப்பை உதிர்த்துக்கொண்டே அந்த மழலையிடமிருந்து தலையை விடுவித்துக் கொண்டாள். இதோடு கிழவி சும்மாயிருக்கவில்லை. கிழவிகளின் குணமே நல்லதோ கெட்டதோ பேசிக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? அதுவும் குழந்தையென்றால் கேட்கவேண்டுமா? “என்னாடி கண்ணு! உன் பேரு என்ன?” என்று கிழவி கொஞ்சினாள். “மூர்த்தி” என்று கணீரென்று உச்சரித்தது குழந்தை. “உங்க அப்பா பேரு?” என்றாள் கிழவி. “எங்கப்பா பேரு குமரேஸ். உன் பேரு என்னா ?” என்று குழந்தை கேட்டவுடன் கிழவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. குமரேசும் சந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். அப்போது எதிர்ப்பலகையிலிருந்தும் ஒரு சிரிப்பு வெடித்தது. அதைச் சந்திரா கவனித்தாள். சிரித்தவனும் சிரிப்பினூடே சந்திராவைத்தான் உற்றுப் பார்த்தான்.

அவனைப் பார்த்த சந்திரா திடுக்கிட்டு அப்படியே ஸ்தம்பித்து விட்டாள். ஆனாலும் திடப்படுத்திக் கொண்டு குழந்தையின் விளையாட்டைக் கவனித்தாள். என்னும் அவள் நீலக் குறுவிழிகள் மட்டும் எதிர்ப் பக்கத்திலுள்ள அந்த வாலிபனையே அடிக்கடி விழுங்கிக்கொண்டிருந்தன. அந்த வாலிபன் நல்ல அழகன். விசாலமான கண்கள், அரும்பு மீசை, அழகை அதிகப்படுத்த பளபளப்பான பட்டுச்சட்டை. அவனது பெரிய கண்கள் சந்திராவைப்