50
சிறுகதைகள்
கம்பாசிட்டர் கந்தசாமி வந்து நின்றான்.
ஓங்கி ஓர் அறை! கந்தசாமி மானேஜரால் தாக்கப்பட்டான்.
அடிபட்ட கந்தசாமி அழவுமில்லை; ஆத்திரப்படவுமில்லை; சிரித்தான்.
“என்னடா சிரிக்கிறாய், தடிப்பயலே!”
மானேஜர் ‘நோட்டீசை’ அவன் முகத்தில் எறிந்தார்.
“ஒன்றுமில்லை சார்; ஒரிஜினலில் உள்ளபடியே அச்சுக் கோர்த்திருக்கிறேன்.”
“ஒரிஜினலா? எதுடர ஒரிஜினல்? ஒரிஜினலில் பாஞ்சாலி விபச்சாரம் என்றுதான் போட்டிருக்கோ ”
“ஆமாம். இதற்கு உண்மையான ஒரிஜினல் பாரதம் இத்தக் கையெழுத்து நோட்டீஸ் அல்ல!.. பாரத ஒரிஜினலில், ஐவருக்கும் தேவியாகவும் ஆறாவது புருஷனாகக் கர்ணன் மேல் ஆசை கொண்டவளாகவும்தான் பாஞ்சாலி சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். அந்த லட்சணப்படி பாஞ்சாலி சுயம்வரத்தைவிடப் பாஞ்சாலி விபச்சாரம் என்று போடுவதுதான் எனக்குச் சரியான ஒரிஜினலாகத் தெரிந்தது.
அதுமட்டுமல்ல... இந்தச் செட்டியார் காமக்காண்டா மிருகம். அதுதான் இவர் வாழ்க்கை வரலாற்றின் ஒரிஜினல்! அதன்படி காமநாதன் செட்டியார் என்று ‘கம்போஸ்’ செய்தேன்.
உபன்யாசத்திற்கு வரும் சாமியார். ஒரு போகப் பூனை. அவன் பகலில் பரம பக்தன். இரவில் பரம பாதகன். இந்த உண்மை ஒரிஜினலை நான் மாற்ற விரும்பாமல்... சுவாமிகள் போகானந்த என்று