இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலைஞர் மு. கருணாநிதி
51
போட்டேன்.. இது குற்றமா?” -கந்தசாமி கலகலவென்று சிரித்தான்.
“ஆ!” மானேஜர் வாயைப் பிளந்தார்.
“பொறும். நீர்தானே சொன்னீர் ஒரிஜினலில் உள்ளபடி போடு என்று!”... கந்தசாமி மீண்டும் சிரித்துக் கொண்டே வேதாந்தி பிரசைவிட்டு வெளியேறினான்.
செட்டியாரும், மானேஜரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
⬤