56
சிறுகதைகள்
ஏற்பட்டது. கிருஷ்ணய்யர் கோயில் குருக்கள் என்ற போதிலும் மிடுக்கான நடையுடை பாவனைகள் உடையவர். கழுத்திலே அழகான தங்கச் சங்கிலி, அந்தச் சங்கிலியின் முனையிலே ருத்ராட்சக்காய், இடுப்பிலே மயில்கண் வேட்டி, மேலே ஒரு வெண்பட்டுத் துண்டு, பி.ஏ. குடுமியுடன் கூடிய அமெரிக்கன் கிராப்-இவைதான் கோயில் குருக்கள் கிருஷணய்யரின் அடையாளங்கள்! மறந்து விட்டேனே- மன்னிக்கவும்-அன்றாடம் சலவை செய்யப்படும் பூணூல் உண்டு, மார்பிலே விபூதிப் பூச்சு உண்டு; விஷ்ணுவுக்கு விசேடமான நாட்களிலே நாமமும் போடுவார்; பட்டையாக அல்ல, பக்குவமாக, சிறிய கோடாக சிங்காரம் கெடாமல்!
வயதோ முப்பதிற்கு மேல் இல்லை. இந்த ஒரு முதல் போதாதா காதல் வியாபாரத்தை ஆரம்பிக்க!
ஐம்பது அறுபது ஆனதுகளே, நரைமயிர் கருக்கும் தைலம் தடவிக்கொண்டு, பொய்ப் பல்லால் புன்னகை புரிந்து, நஷ்டம் வந்தாலும் பரவாயில்லையென்று காதல் வாணிபம் நடத்தக் கன்னியரைத் தேடி அலையும்போது, முப்பதே வயதான கிருஷ்ணய்யர் மட்டும் சும்மா இருப்பாரா? அதுவும் புறா வலுவிலே பறந்து வருகிறது வட்டமிட்டுப் போகிறது என்றால், கேட்கவும் வேண்டுமா?
நாள்தோறும் நாராயணி ஆண்டவன் சன்னதியிலே கண்ணீர்த் துளிகளை சிந்தினாள். கிருஷ்ணய்யர், விபூதிப் பிரசாதம் அளித்து வந்தார். இந்த விஷயம், பல நாட்கள் மௌனமாகத்தான் நடந்து வந்தது. மாலை எப்போது வரும், அப்போது அந்த மயிலும் வருமே என்று பாதை மீது பார்வையை விரிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணய்யர். நாராயணி கடவுளின் முன்னே தினம் தினம் அழவேண்டிய காரணமென்ன? -குருக்களின் இதயத்தைக் குடைந்தது