பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

59


கொண்டிருந்தாள். பிரகாரத்திலே. அப்பிரதக்ஷணமாக சுற்றி வந்து கொண்டிருந்த கிருஷ்ணய்யரை அவள் எதிரே கண்டாள். நாணத்தால் தலையைக் குனிந்தவாறு அவரைக் கடந்து செல்ல முயன்றாள். கிருஷ்ணய்யர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிரகாரத்தின் பக்கம் யாருமே வரவில்லை. எல்லோருமே கச்சேரி மண்டபங்களில் நிறைந்நிருந்தனர். “நாராயணி, நில்!” என்றார் மெதுவாக. நாராயணிக்குக் கால் பெயரவில்லை. நின்று தீர வேண்டியிருந்தது. கிருஷ்ணய்யர் அவள் எதிரே ஓடினார். அவள் கால்களிலே தலை முட்டுமளவுக்கு சாஷ்டாங்கமாக தெண்டனிட்டு வீழ்ந்தார்.

நாராயணிக்கு ஒன்றுமே புரியவில்லை. “சுவாமி! சுவாமி!!” என்று கத்தி விட்டாள்.

“நாராயணி! அடியேனை ஏற்று ரட்சிப்பாய். தேவி விக்கரகத்தின் மூன்னேகூட அடியேன் இப்படி நமஸ்கரித்தது கிடையாது. தீதான் எனக்குத் தேவி! என்னை ஏற்றுக்கொள்!” என்று மன்றாடி நின்றார்.

“சுவாமி! தாங்கள் தேவ குலம். நானோ....” என்று இழுத்தாள் அவள்.

“முற்றும் கடந்த பெரியவாளுக்கு எல்லாக் குலமும் ஒரே குலந்தான்! நான் ஆண்குலம் தீ பெண்குலம்; வா, இருவரும் காதல் குளத்திலே நீந்துவோம்” என்று கையைப் பிடித்தார் அய்யர்.

“அய்யோ,சாமி! ஆண்டவன் கோயில்..” என்று எச்சரித்தாள் நாராயணி.

“அருகில் ஒன்றும், தலையில் ஒன்றும் வைத்திருப்பவர்தானே ஆண்டவன்; இது தெரியாதோ நோக்கு!” என்று அவள் ஜடையைப் பிடித்து விளையாடினார் குருக்கள்.