பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சிறுகதைகள்



‘கிருஷ்ணய்யர் - நாராயணி’ ஜோடியைப் பார்க்கும் போது, ‘அய்யோ, இந்த யுவதிக்கு இந்த மனிதன் அவ்வளவு பொருத்தமில்லையே’ என்று சொல்லத்தான் தோன்றும். ‘கிளி மாதிரி இருக்கிறாள்; இவனோ எலி மாதிரி இருக்கிறான்’ என்று விமர்சித்தவர்களும் உண்டு. ‘பேரழகின் பிறப்பிடம் அவள்; இந்தப் பிராமணனோ இவளெதிரே விண்மீனுக்கு முன் மின் மினியாகத் தெரிகிறான்’ -இப்படிப் பேசாதாரும் இல்லை. ஆனால், நாராயணியின் கண்களோ, இவைகளுக்கெல்லாம் விதிவிலக்கு. அவள் மனக்கண்களுக்கு முன்னே எல்லோருடைய விமர்சனமும் தவிடு பொடியாகிவிட்டது.

குலப் பெருமை இழந்தார்,கோயில் குருக்கள் என்ற மதிப்பை இழந்தார்-இவ்வளவும் தனக்காக! தன்னிடம் தந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக!என நினைக்கும் போது, நாராயணிக்கு நேரே கிருஷ்ணய்யரின் உருவம் கிருஷ்ண பகவானின் உருவம் போலவே தோற்றமளித்தது. “கண்ணா, மணி வண்ணா!” என்று அவள் பாடாததுதான் பாக்கி. அவ்வளவு பக்தியும் பாசமும் புருஷன் மீது ஏற்பட்டு விட்டது அவளுக்கு.

குஷ்டரோகிக் கணவனைத் தாசியின் வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி, தேவலோகத்து மாதர்கள் கற்பரசிகளாய் இல்லாத போது, பூலோகத்திலே மட்டும் கற்பரசிகள் இருக்கலாமா? அவர்களைச் சோதிப்போம்.' எனத் தோள் தட்டிப் புறப்பட்டு, நிர்வாணமாக வந்து சோறு பரிமாறச் சொன்ன மும்மூர்த்திகளைக் குழந்கைதளாக மாற்றி, நிர்வாணக் கோலத்தோடு அன்னமிட்ட அனுசூயா இத்தகைய பத்தினிகளை யெல்லாம் தோற்கடிக்கும் அளவுக்குப் பதிசொல் தட்டாத பாவையாக நடந்து