பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

65


கொள்ளவேண்டுமென்று நாராயணி ஆசைப்பட்டாள். அவளது பதிபக்தியைப் பார்த்து ஊரே ஆச்சரியப்பட்டது.

கோயில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் இரவு கிருஷ்ணய்யர் அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடி வந்தார். அவரது உடலெங்கும் வியர்வைத் துளிகள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி “நாராயணி! நாராயணி!” என்று அலறினார்.

அவளோ, “என்ன? என்ன?” என்று கேட்டபடி, சின்ன இடை நெளிய ஓடிவந்தாள், பள்ளியறையிலிருந்து.

அய்யர், பிரக்ஞையற்ற நிலையில் நின்று கொண்டு பிதற்றினார்.

“நாராயணி! நோக்காக நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கேன்?”

“ஆமாம், அதற்கென்ன இப்போது?”

“ஞாபகமிருக்கா? நோக்காக நீ உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்வேணு சொன்னியே!”

“ஆமாம், சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன்!”

“நாராயணி! ஆபத்து வந்துவிட்டதடி! நீ, ஆவியையும் பொருளையும் தியாகம் செய்யத் தேவையில்லை. உடலை மட்டும் தியாகம் செய்; போதும்!”

“என்ன சொல்கிறீர்கள் சுவாமி?”