68
சிறுகதைகள்
அந்தப் பலமான அணைப்பிலே சிக்கியபடியே நாராயணி அவரைப் பார்த்துப் பேசினாள். இருவருடைய முகங்களும் ஒன்றுக்கொன்று வெகு அருகாமையிலே தானிருந்தன. அவள் ஆத்திரத்தோடு கேட்டாள் “நீங்கள் செவி மடுக்கும் உபன்யாசங்களிலே இப்படித்தான் இன்னொருத்தன் மனைவியிடம் இன்பப் பிச்சை கேட்கச் சொல்லுகிறார்களோ?” என்று.
“ஆமாம் கண்ணே, ஆமாம்! சாம்பல் பூசிய சிவனை, தன் மனைவியோடு சரச சல்லாபத்திற்கு அனுப்பிய இயற்பகை நாயனார் புராண காலட்சேபம் இன்று காலையிலே தான் ஆயிரக்கால் மண்டபத்திலே அதிவிமரிசையாக நடைபெற்றது” எனக் கூறியபடி அவள் முகத்தோடு தன் முகத்தைப் பொருத்த முனைந்தார். அவரிடமிருந்து எப்படியும் விடுபட வேண்டும் என்ற ஆவேச உணர்ச்சியோடு அவரை ஒரு தள்ளாகக் கீழே தள்ளிவிட்டு, சுவரின் பக்கம் போய் ஒதுங்கி நின்று விம்மியழத் தொடங்கினாள் அவள்.
நாயுடுவுக்குக் கோபம் பிறந்தது. “நாராயணீ இதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. நாளைக்கு உன் புருஷன் கையிலே காப்பு போட்டுக் கொண்டு வீதியிலே போவான். அதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையிருந்தால் உன் இஷ்டப்படியே நட!” என்று கூறிவிட்டு நாயுடு அறையைவிட்டு வெளியேறினார்.
நாராயணி சிலைபோல் நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணய்யர் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தார். “அடிபாவி! என்னை மோசம் செய்து விட்டாயே!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு அலறினார். நாராயணிக்கு அவரோடு பேச மனமில்லை. பேசாமல் கட்டிலில்