பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர்களுக்கு மறுப்பாக இல்லாவிட்டாலும், ‘இவர்களின் சிறுகதைகளில் சிலவற்றையாவது படித்துப் பாருங்கள்’ என்ற கோரிக்கையோடு இந்தத் தொகுப்புகள் இப்போது வெளியிடப்படுகின்றன.

அத்திபூத்தாற்போல சில வேளைகளில் சில நடுநிலையாளர்கள் அண்ணாவின், கலைஞரின், திராவிட இயக்கத்தாரின் எழுத்துப் பணியைப் பாராட்டாமலும் இல்லை.

பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் (செட்டியார்) போன்ற பெருமக்கள் அதனைச் செவ்வனே செய்துள்ளனர். (‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’) - (1977).

‘உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்தவர் அண்ணா’ (பக்கம் : 235) என்றும், ‘மு.கருணாநிதியின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச் சிறப்பு. இவர் எழுதிய ‘குப்பைத் தொட்டி’ என்ற கதை எந்தச் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெறும் தகுதியைப் பெற்றது.’ (பக் : 236) என்றும், ‘தமிழில் சிறுகதை; வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் திறனாய்வு நூலில் குறிப்பிடுகிறார்கள் அதன் ஆசிரியர்கள் பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாத சுந்தரம் ஆகியோர்.

இந்தத் தொகுப்புகளில் இணைக்கப்பட்டுள்ள கதைகள் பெரும்பாலும் ஐம்பதுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் வருகிற நடப்புகள் சில, அந்தக் காலத்துக்கு மட்டுமே பொருத்தமானவையாக இருக்கக் கூடும். அவற்றில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளோம்.

இவர்கள் எழுதிய சில நல்ல கதைகள் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.

இவை புதிதாக இப்போது எழுதப்பட்ட கதைகள் அல்ல. இன்றைய தமிழ்ச்சிறுகதைகளின் ‘பாணி’ யில் கூட இவற்றில் சில

VI