இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலைஞர் மு. கருணாநிதி
75
லாம் நடுத்தெரு நாராயணி என்றால் அவள் இருக்கும் தெருவைக் குறிக்கும். இப்போதோ?.. நடுத்தெருவுக்கு அர்த்தமே வேறு!—
☐
என்னதான் நாராயணியின் வாழ்க்கை கெட்டுவிட்டாலுங்கூட, அவளது மனத்திலே நரசிம்ம நாயுடுவுக்கு நல்லதோர் இடமுண்டு. அற்ப புத்திக்கார அய்யரைக் கொல்லப்போய் ஆசை நாயகனையல்லவா கொன்று விட்டாள். அவசரத்திலும்—ஆவேசத்திலும்! பாமாவினால் கொல்லப்பட்டதாகச் சித்திரிக்கப்பட்ட நரகாசுர வதைப்படல ஊர்வல ரதத்தைப் பார்க்கும்போது அவளுக்கு, தான் செய்த கொலைதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதனால்தான் தீபாவளி தினத்திலே அவள் அப்படி சோகமாக அமர்ந்திருந்தாள் போலும்! ★