பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சிறுகதைகள்



“பொம்பளைப் பக்கம் அவரு பார்த்துப் பேசும்போது அவரு வாயெல்லாம் புன்சிரிப்படி! ஆனா எலுமிச்சம் பழம் மாதிரி, கொழு கொழுன்னு இருக்கார். எல்லாம் தெய்வப் பொறப்புடீ, தெய்வப் பொறப்பு!”

“நம்மாத்துக் காரரும்தான் இருக்கார். நாலு வார்த்தை இப்படி அழகாகப் பேசுவாரா?”

“டேய்... தீராத வினையெல்லாம் இவரு விபூதியினாலே தீருமடா.”

“ஆள் சாமான்யமா? ஆயிரம் ஜனங்களை, ஆபத்திலேயிருந்து காப்பாற்றினாரப்பா!”

“அதென்ன ஆபத்து?”

“இது தெரியாதா?... இவருக்கு ஏன் ‘சங்கிலிச்சாமி’ன்னு பேரு தெரியுமா?”

“சங்கிலிக் கருப்பன் பூஜை செய்வார்.”

“அட மூடம், அதில்லை. ஒருநாளு மெட்ராஸ் மெயிலு... வெகுவேகமாக மெயில்மாதிரி போச்சாம்.”

“எந்த ஊருக்கு?”

“மெட்ராசுக்கப்பா.”

“உம்; சொல்லு”

“நம்ப சாமியும் அதிலே இருந்திருக்கு. சாமி... இருந்தாப்போல இருந்தது...”

“மறைஞ்சுட்டுதா?”

“இல்லப்பா...ரயிலில் இருக்கிற அபாய அறிவிப்புச் சங்கிலியைப் பிடிச்சு இழுத்திருக்கு”

“உடனே ரயில் நின்னு இருக்குமே?”