பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

79



ஆமாம்; ரயில் நின்றதும்... கார்டு வந்து ‘யாரப்பா ரயிலை நிறுத்தியது?’ அப்படின்னு கேட்டிருக்காரு.”

“சாமி என்னா சொன்னது?”

“நான் தானப்பா! தண்டவாளத்தில் ஆபத்தாப்பா; உடனே போய்ப்பாரப்பா என்று சொல்லியிருக்கு சாமி”

“ஆஹாஹா... என்ன சக்தி! என்ன சக்தி!”

“எல்லோரும் போய்த் தண்டவாளத்தைக் கவனித்துப் பார்த்தா... தண்டவாளத்தை வெட்டி... ரயிலைக் கவுக்கச் சூழ்ச்சி பண்ணியிருக்கு.”

“அடடா!”

“உடனே ஜனங்களெல்லாம்... சாமி காலில் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம்பண்ணி, எங்களைக் காப்பாத்தின கடவுளேன்னு கட்டிப்பிடிச்சுக் கிட்டாங்களாம்.”

“த்சு! த்சு!...சாக்ஷாத் கடவுளே அவதாரம்! என்னமோ, இந்தக் கலிகாலத்திலே நமக்கெல்லாம் காணக்கொடுத்து வச்சிருக்கு,”

“அதிலேருந்துதான் சங்கிலிச்சாமின்னு பேரு. நம்ப சின்னப்பண்ணை முதலியாரும் . அதே ரயிலில் இருந்திருக்காரு. அவருக்குச் சாமிமேலே ஒரு மோகம் விழுந்துட்டுது.”

“ஓ.....அதான்...முதலியார் இவ்வளவு தடபுடல் பண்றார்... இல்லேன்னா... இந்தக் கருமி இப்படிக் காசு செலவுபண்ண மாட்டாரே!”

சின்னப்பண்ணையின் மேல்மாடியில் பட்டு மெத்தை ஒன்றில் சங்கிலியானந்த சாமி... ... சயனித்திருக்க. சம்பந்தம் அடிவருட, பண்ணையார்... ‘பங்கா’ போட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மெத்தையில் பண்ணைக்காரரின் குச்சுநாய் படுத்துக் கிடந்தது.