பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

81



சாமியாரின் நெற்றியில் சில சுருக்கங்கள் மின்னி மறைந்தன.

“சம்பந்தம்!”

“ஸ்வாமி!”

“நாளைக் காலை பூசை முடிந்ததும் யாரும் மாடிக்கு வரக்கூடாது.”

“உத்தரவு”

“நீயும்தான்.”

“ஆகட்டும்.”

“இரவு முழுவதும் நான் தனித்திருந்து சிவபூசை செய்ய வேண்டும்.”

“ஆக்ஞை ஸ்வாமி.”

“முதலியார்...!”

“ஸ்வாமி...!”

“தெரிந்ததா?”

“ஆஹா...!”

“இரவு பூசை முடிந்து...மறுநாள் உதயமானதும் நீர் மாடிக்கு வரவேண்டும்... உமது விருப்பம் நிறைவேறியிருக்கும் நீர் கேட்பதும் தங்கந்தானே?”

“ஆமாம்...... அதைவிட உயர்ந்ததாய் ஆக்க முடிந்தாலும்.....”

“கவனிப்போம்...... வைரப் பாளமாகக்கூட ஆக்க முடியும், சிவனருள் எப்படி இருக்கிறதோ...!”