கலைஞர் மு. கருணாநிதி
83
பொழுது விடிந்தது. தங்கத்தைப் பார்ப்பதற்காக சம்பந்தத்தையும் அழைத்துக் கொண்டு மேல் மாடிக்கு ஓடினார்.
சாம்பிராணி வாடை நிரந்தரமாகப் பாவி முதலியாருக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுத்தபடி இருந்தது. மாடியில் நுழைந்த முதலியார் “சாமி...... சாமி...” என்று கத்தினார். அவ்வளவுதான்; மூர்ச்சையாகி விட்டார்.
சம்பந்தம் முதலியாரைத் தூக்கி தேற்ற ஆரம்பித்தான். மாடியிலிருந்து தோட்டத்துப் பக்கம் தொங்கிக் கொண்டிருந்த அழுத்தமான கயிறு காற்றில் அசைந்தது. முதலியார் மூர்ச்சை தெளிந்து, சம்பந்தத்தை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் “ஏ, சம்பந்தம்! இரண்டாயிர ரூபாய் எடை வெள்ளி போச்சே!” என்ற சோகம் பிரதிபலித்தது.
‘பேராசை பெரு நஷ்டம்’ என்பது போலிருந்தது சம்பந்தத்தின் பதில் பார்வை.
“சம்பந்தம்! கருவாடு களவு கொடுத்த பாப்பாத்தி கதையாக அல்லவா என் கதை முடிந்துவிட்டது.”
“ஆமாம்... வெளியில் சொன்னால் வெட்கக்கேடு”
“ஜெயிலுக்குப் போக வேண்டுமப்பா.”
“உம்...... இந்தச் சண்டாளன் இப்படிப் பண்ணி விட் டானே!”
“சம்பந்தம்... நீயும் இந்தச் சதிகாரனுக்கு உடந்தையா?”
“முதலியார்!... என்னை மன்னித்து விடுங்கள். நானும் உடந்தையாகத்தானிருந்தேன். அந்தப் படுபாவி என்னையும் ஏமாற்றிவிட்டான்.”
“பரம பக்தர்கள் போல் நடித்தீர்களே!”