84
சிறுகதைகள்
“நடிக்காவிட்டால் நீங்கள் நம்புவீர்களா?”
“அடபாவி... ரயிலில் அவனைப் பார்த்தது முதல் என்னைச் சனியன் பிடித்துக் கொண்டதே.”
“சனியனல்ல; சரியான ஆசை பிடித்துக் கொண்டது முதலியாரே! ஆசையால் விளைவதுதானே ஆபத்துக்கள்.”
“போதுமப்பா வேதாந்தம். உங்கள் வேதாந்தத்தைக் கேட்டுத்தான் இவ்வளவு விபரீதம்.”
“இனி நான் வேதாந்தம் பேசமாட்டேன். அந்தச் சூதனைத் தொலைக்க வழி தேடுவேன்.”
“கடலில் போன என் சொத்து, இனிக் கரையேறுமா?”
“சம்பந்தத்தின் கப்பல் ஒரு துரும்பு விடாமல் அரித்துக்கொண்டு வந்துவிடும், கலங்காதீர் முதலியாரே!”
“வெள்ளிக் கட்டிகளப்பா, வெள்ளிக்கட்டிகள்!”
”வைரக் கட்டிகளாகத் தருகிறேன். வியாகூலப் படாதீர்.”
“ஏன்...உனக்கு ஏதாவது தங்கக் கட்டி வேண்டுமோ?”
'தவறாக என்னை மதிக்காதீர்... முதலியாரே!... என் கதையைக் கேட்டால் என் மீது பரிதாபப்படுவீர்.”
“எந்த இழவையாவது சொல்லித் தொலை!”
“நான் ஒரு சாதாரண மனிதன்”
"அதுதான் தெரியுமே!...”
"சங்கிலிச்சாமியும் ஒரு சாதாரண மனிதன்”
"யார் இல்லையென்றது?’”
“ரயில் விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினாரே..”