பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

85



“அதில்தானே நானும் மயங்கி விட்டேன்”

“நீங்கள் மட்டுமென்ன உலகமே மயங்கி விட்டது”

“ஜாலவித்தைக்காரன்! என்னமோ மந்திரம் பண்ணி மயக்கி விட்டான்.”

“மந்திரமல்ல, மகா பெரிய தந்திரம்”

“தந்திரமா?”

“ஆமாம். தண்டவாளத்தைப் பெயர்த்து வைத்தது யார் தெரியுமா?”

“அந்தத் தடியன் தானா?”

“இல்லை..நான் தான் முதலியாரே! இரவெல்லாம் கஷ்டப்பட்டுத் தண்டவாளத்தை உடைத்தேன், அவன் சங்கிலியைப் பிடித்து இழுத்து சாமியாராகிவிட்டான்.”

“பிழைப்பதற்கு வழி.. பிரமாதமாகத்தான் கண்டு பிடித்திருக்கிறீர்கள்.”

“வழி பிரமாதந்தான்: அந்த வஞ்சகப் பயல் என் வாயிலும் மண்ணைப் போட்டுவிட்டானே!”

“சம்பந்தம்.. பேச நேரமில்லை. அவனைப் பழி வாங்க வேண்டும். என்ன யோசனை?”

“முதலியார்... அருமையான யோசனை. இப்பொழுதே மேல் மாடிக் கதவை மூடிவிடுங்கள்.”

“ஏன்?”

“ஜனங்கள் வந்து... ‘சாமியார் எங்கே?’ என்பார்கள். ‘சாமி மேல் மாடியில் யோகானந்தம் புரிகிறது. கடவுளோடு பேசுகிறது. கதவை திறக்க முடியாது’ என்று கூறி விடுவோம்.”

“இதைச் செய்தால் என் வெள்ளி வந்துவிடுமா?”

“வெள்ளியாலேயே நீர் வீடு கட்ட நான் வழி செய்கிறேன். நான் சொல்வதை முதலில் கேட்க வேண்டும்.”

“சரி... கேட்கிறேன்.”