பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவல்லிக்கேணி மஹாத்மியம் இன் துணைப்பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவிதனக்கு இறைவன் தன் துணை ஆயர்பாவை நப்பின்னை தனக்குஇறை மற்றையோர்க்கெல்லாம் வன் துணை பஞ்சபாண்_ வர்க்காகி வாயுரை தூதுசென்றியங்கும் என்துணை எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே. மன்னுதண்பொழிலும்வா வியும்மதிளும் மாடமாளிகையும்மண்டபமும் தென்னன் தொண்டையர்கோன் செய்தநல்மயிலைத் திருவல்லிக்கேணிநின்றானை கன்னிநல்மாடமங்கையர் தலைவன் காமருசீர்க்கலிகன்றி சொன்னசொல்மாலைபத்துடன் வல்லார் சுகமினிதாள்வர் வானுலகே. பெரியதிருமொழி. உ -ங-(க-கய) வந்துதைத்த வெண்திரைகள் செம்பவளம்வெண்முத்தம் அந்திவிளக்குமணிவிளக்காம் - எந்தை ஒருவல்லித்தாமரையாள் ஒன்றியசீர்மார்வன் திருவல்லிக்கேணியான்சென்று. மூன்றாந்திருவந்தாதி. (ககூ) தாளால் உலகம் அளந்த அசைவேகொல்? வாளாகிடந்தருளும் வாய்திறவான்- நீளோதம் வந்தலைக்கும்மாமயிலை மாவல்லிக்கேணியான் ஐந்தலைவாய் நாகத்தணை. நான்முகன் திருவந்தாதி.(கூரு) ஸ்ரீ பார்த்தஸாரதிகுருவே நமச் ஸ்ரீவைஷ்ணவ அச்சுக்கூடம், சென்னை.