பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லிக்கேணி மஹாத்மியம்

9


மென்று வரப்ரதானஞ் செய்தருளி, வாரீர் பிருகுவே! உம்மிடத் தில் வளரும் வேதவல்லி என்னும் கன்னிகையை எனக்குக்கொடுத் துத் திருக்கலியாணஞ் செய்யவேண்டுமென்று அருளிச்செய்தார். பிருகுமஹாரிஷியும் தன்யோஸ்மி என்று ஒத்துக்கொண்டு, வேத வல்லியை அழைக்க அவளும் புன்னகையுடன் வந்து ஶ்ரீய:பதி யைச்சேவித்து, இவர்தான் மந்நாதனான பர்த்தாவென்றும் இவ ரைத்தான் விவாஹஞ்செய்துகொள்ளக் கடவேனென்றுஞ்சொல்ல அப்படியே செய்விக்கின்றேனென்று சொல்லி பிருகுவும் தேவர் களும் ரிஷிகள் சூழ ஶாஸ்திரோக்தளும் பிரகாரம் ஹோமாதிகளை வளர்த்து பாணிக்கிரஹணவிவாஹ மஹோத்ஸவங்களைச் செய்வித் தார். அப்போது ப்ரம்ஹருத்திரேந்திராதி தேவர்கள் ரிஷிகள் முதலானசகலரும் மந்நாதனான ஸ்ரீயபேதியைச் ஸாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்துபலவாறாக ஸ்தோத்திரஞ்செய்து புஷ்பமாரி பொழிந்து ஆனந்தபரிதராய் பிருகுவைக் கொண்டாடி இந்தவேத வல்லித்தாயாரை சாக்ஷாத் ஸ்ரீமாஹாக்ஷ்க்ஷ்மி என்றறியு மென்று சொல்லித் தங்கள் தங்கள் ஸ்தானங்களை யடைந்தார்கள். அனந்தரம் மந்நாதனான என்னையாளுடை அப்பன் என்னும் ஶ்ரீய:பதியானவர் மாகமாதத்துச் சுக்லபக்ஷத் துவாதசியில் ஆவிர்ப்பவித்து திருக்கலியாணஞ் செய்துகொண்டு அனேக ஆத் மோஜ்ஜீவனமாக அந்தப்ருந்தாவனத்தில் சேவைசாதித்துக்கொண் டிருக்கும் வைபவத்தைக் கேட்கின்றவர்கள் வாசிக்கின்றவர்கள் அந்தத் தினத்திலே அவரைத் தண்டஞ்சமர்ப் பிக்கின்றவர்கள் முதலாயினார் இஹபரைஸ்வரியத்தை யடைந்து வாழ்ந்துகொண் டிருப்பார்கள். 2