பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருக்குறட் குமரேச வெண்பா கேடுகளால் நேரும் போக்குகளை எல்லாம் நோக்கியறிய இதனை நுவன்றருளினர். தானமும் தவமும் வானம்.அருளவருகின்றன. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். (கொன்றைவேந்தன்) என ஒளவையாரும் இவ்வாறு கூறி யுள்ளார். உயிர் உடலில் நிலைத்திருத்தற்கு உணவும் நீரும் எத்தகைய தவசிகளுக்கும் அவசியம் தேவை; உயிர் ஆதாரமான அங்கீரை மழை கருகிறது; அவ்வாறு வழங்கி வந்த அது வழங்காது கின்றுவிடின் யாரும் தவத்தைச்செய்ய முடியாத ஆதலால்தவம் தங்காது என்ருர். அரிய தவமும் நீரால் நிலைத்து வருகிறது. வானம் மழையை வழங்காதாயின் இங்கே கானம் சிகை யும், கருமம் கொலையும், தவம் குலையும், மனிதவாழ்வுகள் யாவும் மறுகி அலையும் என்பன இதில் உணர வந்தன. இவ்வுண்மையை ஒரு மன்னனும், பல முனிவரும் முன்னம் உணர்த்தி நின்றனர். ச ரி த ம். உக்கிர வீரன் என்னும் பாண்டியன் அதிசயமேதை. அரிய பல கலைகளைப் பயின்று தெளிந்தவன். வீரம் கொடை நீதிகளில் யாரும் தனக்கு நிகரில்லாதவனப் விறு கொண்டு விளங்கியிருக் தான். சிறந்த புலவர்களை ஒருங்கு சேர்த்துப் பெருந்தகவுடன் ஆகரித்துக் கமிழை இவன் இனிது வளர்த்து வந்தான். அவ்வாறு வருங்கால் தன் நாட்டில் மழை பெய்யாமல் மாறி கின்றது. அதனுல்வெய்ய துயரங்கள் யாண்டும் நீண்டுகின்றன. "மல்குமாறு கோள் திரிந்து மழைகருங்கி நதியும் நீர் ஒல்குமாறு பருவ மாறி உணவு மாறி உயிர்எலாம் மெல்குமாறு பசியுழந்து வேந்தனுக்கு விளைபொருள் நல்குமா றிலாமை இன்னல் கலிய அந்த காடெலாம்." இன்னவாறு அல்லல் அடைந்த குடிகள் அலமாலடை யவே புலவர்களை ஆதரிக்க முடியாமல் வேந்தன் வருக்கினன். மதிநலமுடைய அவ ை நேரே அழைத்து "அருமைப்புலவிர்! நம் நாடு மழையின்மையால் மறுகியுளது; இது பொழுது அய லிடங்களுக்குப் போய்ச் சுகமாய் அமர்ந்திருங்கள்; புயல் வளம் பொலிந்து இந்நாடு செழிக்க பின்பு இங்கே வந்த சேருங்கள்” என்று கூறிச் சங்கப் புலவர்களை எங்கும் அனுப்பியருளிஞன்.