பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* = ||. 8. நீத்தார் பெருமை 135 இந்தப் பாசுரங்களைக் கூர்ந்த பார்ப்பவர் அரிய பல உண் மைகளை அறிந்து கொள்ளுவர். கெளதமருடைய வாய்மொழி யை நின்கைச் சுடுசரம் அனைய சொல் என்று கோசிகர் குறித் திருக்கலால் இராமபாணம்போல் அது அதிசய ஆற்றல் உடை யது என்பது தெரிய வந்தது. பிரம தேவன் முதலாகத் தேவர் யாவரும் இந்த மாதவனிடம் வந்து ஆதரவோடு புகழ்ந்த இக் திரனை மன்னித்தருளும்படி போற்றி வேண்டியிருக்கின்றனர். நீற்று மேனியர் மாரனே ற்ேறினல் போல ஆற்றல் மாதவ! அரும்பிழை புரிந்த வாசவனேக் கூற்றம் வாய்மடுத்து உணக்கொழுஞ் சாம்பர் ஆக்காது போற்றி வைத்ததும் புண்ணியா எம்பொருட்டு அன்றே. (விகாயகபுராணம்} சிவபெருமான் மன்மகனே எரித்து நீருக்கியதுபோல் இந்தி ரனே நீங்கள் சாம்பலாக்காமல் உயிரோடு விட்டு வைத்தது பெருங்கருணையே என்று வானவர் இவ்வாறு இவரை வாழ்த்தி யிருக்கின்றனர். ஆற்றல் மாதவl என்று கோகமரை அமரர் போற்றியிருப்பது ஐந்து அவித்த இவரது அதிசய ஆற்றலை வியந்தே. பொறிகளை அவித்தவன் புராரிபோல் பொலிங் தளான். இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு o வொன்றிய படியிது என்று உரைசெய் வோரும். (பரிபாடல், 19) இம்மாதவர் சரித்திரம் சிலே எழுத்தாய்க் கலையுலகில் இவ் வாறு பரந்து விரிங் தள்ளது. ஐந்து அவித்தான் ஆற்றலுக்கு இந்திரனே தெளிவான சாட்சி என்பதை வானும் வையமும் காட்சியாக் காண இந்த ஞான முனிவர் நன்கு காட்டி கின்ருர், உள்ளம் அடங்கி ஒழுகும் உரவோன்பால் வெள்ளமென மேன்மை விரிந்துவரும்-தள்ளரிய இந்திரியம் வென் ருன் எதிரே எளியணுய் இந்திரனும் கின் ருன் இழிந்து. வாவும் மனத்தை வசப்படுத்து மாதவனைத் தேவும் புகழும் தினம். மனம் அடங்கி மகிமை பெறுக.