பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருக்குறட் குமரேச வெண்பா 26. வீடுமனர் மெய்த்தவத்தை மேவினர் சந்தனுவேன் கூடினன் காமம் குமரேசா-நாடிச் செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (சு) இ-ள். குமரேசா செய்ய அரிய தவத்தை விடுமனர் செய்து உயர்ந்தார்; அங்கனம் செய்ய மாட்டாமல் காமத்தில் ஆழ்ந்து சக்தனு என் தாழ்ந்தான்? எனின், பெரியர் செயற்கு அரிய செய்வார்; சிறியர் செயற்கு அரிய செய்கலாகார் என்க. ஒருவனுடைய பெருமையும் சிறுமையும் அவன் செய்யும் கருமங்களால் காணப்படுகின்றன. பொதுவான அக்காட்சி சிறப்பான மாட்சியோடு இங்கே தெளிவாக் காண வந்தது. அறிவும் செயலும் மனிதனே அளந்து அறிகம்குக் கருவி களாய் அமைந்துள்ளன; இவற்றுள் முன்னது துண்மையா அகத்தே மறைந்திருக்கிறது; பின்னது பருமையாய் வெளியே விழி தெரிய வருகிறது. செயலின் வழியே உயர்வும் இழிவும் தெளிவா அறியவருகலால் மனிதனைச் சரியா நேரே குறியோடு தெரிவதற்கு அது முறையான நல்ல அளவுகோல் ஆயது. கல்வியால் பெரியர், செல்வத்தால் பெரியர், அ ஹி வ ல் பெரியர், ஆற்றலால் பெரியர், வயதால் பெரியர் எனப் பெரியர் பலவகையில் உளர் ஆதலால் அவர் எல்லாரையும் அயலே விலக்கி ஒதுக்குகற்கு அரிய செயல் ஈண்டு உரிமையாய் வந்தது. செய்தற்கு அரியனவற்றைச் செய்வாரே பெரியர்; அவ் வாறு செய்ய மாட்டதார் எவ்வழியும் சிறியரே என்பதாம். ' அரியது எத?(ஐம்பொறிகளை அடக்கியிருத்தல்; எளியது, அவற்றை அடக்காமல் அலமந்து உழலுதல். மனம் போனபடி எல்லாம் போய்த் திரிவார் சிறியர்; அங்வனம் இழிந்து போகா மல் சிக்கையை அடக்கித் தெளிந்த ஞான சீலராப் அமைந்திருப் பவர் பெரியர் என்க. அருமையுடையவர் பெருமை அடைகிரு.ர். சிறந்த பெரியாரின் சீர்மையை வரைந்து கூற வந்தவர் சிறியாரையும் சேர்த்துக் கூறியது இருவகை கிலேகளையும் ஒருங் கே பார்த்துக் கொள்ள வந்தது. செயற்கு அரிய செயல் என்.று