பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நீத்தார் பெருமை l41 மான விரதத்தை யுடையவன் என்பதை இந்தப் பெயர் விளக்கி யுள்ளது. தமிழில் அது விடுமர் என வந்தது. அரிய தவசிகளும் பெரிய துறவிகளும் இக் கோமகன் புலன்களை வென்று காமம் கடிந்து கேமமாப் கின்ற நிலைமையை வியந்து புகழ்ந்துள்ளனர். "இளேயர் முதியர் என இருபால் பற்றி விளையும் அறிவென்ன வேண்டா-இளேயய்ைத் தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்ருது நீத்தான் உளன்." (பெரும் பொருள்) தன் காதைக்காக இவர் செய்த செயல் மிகவும் அதிசயம் உடையது ஆதலால் பலரும் இவ்வாறு துதிசெய்ய நேர்ந்தனர். தந்தை காதலுறு தன்மைகண்டு இளேய தாய்பயந்தஇரு தம்பியர்க்கு இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் கின்குலத்து ஒருவன் இங்குளான் முந்த மாநிலம் அனேத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு ஐந்து மாங்கரும் ெேகாடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல்? (பாரதம்) பாண்டவர்க்காகக் கண்ணன் தாது சென்றிருந்தபோது துரியோதனன் இடம் இவ்வண்ணம் உரைத்துள்ளான். இந்தக் கவியின் பொருளையும் சுவையையும் நுணுகி உணர வேண்டும். பெண்ணுசையோடு மண்ணுசையும் ஒருங்கே துறந்த பெரிய துறவியாப் விடுமர் விளங்கியுள்ளார். செயற்கு அரிய செப்த மையால் இவர் பெரியராய் உயர்ந்தார்; அங்ஙனம் செய்யாமல் புலனில் எளியராய் இழிந்தமையால் சந்தனு சிறியராப் கின்ருர். உள்ளம் ஒன்றை அடக்கின் உயர்வுகள் வெள்ளம் என்ன விரிந்து விளங்குமே; கள்ள ஐம்புலக் கால்வழி ஒடினே எள்ள லான இழிதுயர் ஏறுமே. தன்னுள்ளம் காப்பர் தகவோர் தகவிலார் பின்னேடி வீழ்வர் பிழை. அரியன செப்து பெரியன் ஆகுக. _க அ