பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 193 40. நல்வினையே செய்தான் நளன்பாம்பின் செய்கைகண்டும் கொல்வினையேன் விட்டான் குமரேசா-சொல்லின் செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. (ώ) இ-ள். குமரேசா நளன் கல்வினையையே செய்தான்; பாம்பின் செப்கை கண்டும் ஏன் கொல்வினையைத் தவிர்க்கான்? எனின், அறனே ஒருவற்குச் செயல்பால து; பழி உயல்பாலது என்க. இன்பத்தை அறமே தரும்; அதனை மறக்விடின் துன்பமே விளையும் என முன்பு கூறினர்; அந்தப் போதனையைச் சாதனை செய்து வேதனைகள் நீங்கி வர இதில் ஆதரவாப் அருளுகின்ருர். ஒருவன் என்றது உற்ற பிறவியின் பெற்றியை உய்த்து உணர. மிருகம் பறவை முகலிய இழிந்த பிறவிகளில் கழிந்து போகாமல் உயர்ந்த மனிதப் பிறவியை நீ அடைந்து வந்துள் ளாய்; ஒர்ந்து சிந்திக்கும் திறம் உன்பால் நன்கு அமைந்துள் ளது; யாண்டும் எவ்வழியும் சுகமாய் வாழ வேண்டும் என்று நீள நினைந்து வருகிருப்; எண்ணுகிறபடி இன்ப கலங்கள் எய்த வேண்டுமானல் புண்ணியத்தை நீ கண்ணியமாச் செய்யவேண் டும் என்று இங்கனம் உண்மை நிலையைப் போதித்திருக்கிரு.ர். சிறந்த உயர்திணையில் உயர்ந்த ஆண்மகனுய்ப் பிறந்து வக் துள்ள ஒருவன் உரிமையோடு விரைந்த செய்ய வேண்டியது விழி தெரிய வந்தது. அறனே என்றதில் ஏகாரம் தேற்றமும் ஏற்றமும் தெளித்து கின்றது. மகரம் ஒருவி னகரம் மருவி வக் தது ஆண்பாலுக்கும் அறப்பாலுக்கும் உள்ள சிறப்புரிமைகளைச் சிந்தித்து உணர அறனே புரியும் அவனே அதிசயமுறுகிருன். ஒரும்=ஒர்ந்து உணருகிற. அறமே இருமையும் இன்பம் தருவது; உயிர்க்கு எவ்வழியும் உறுதியானது என்று நூலோ ரும் மேலோரும் ஒர்த்துள்ளமையால் ஒரும் என்பது அறத்துக்கு அடையாய் அமைந்தது. பாவம் யாண்டும் துன்பமே விளக்கும் என ஒர்க்கிருத்தலால் அதற்கும் இது அடை ஆயது. ஒரும் திறம் யாருக்கும் உயர்வு தருகிறது. ஒர்தல் = ஊன்றி உணர்தல், ஒர்க்து கண்ணுேடு, (குறள், 541) ?Ꮛ