பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருக்குறட் குமரேச வெண்பா ஒர்த்து உணரின். (குறள், 857) இன்னவாறு பின்னரும் இந்த ஒர்தல் வந்துள்ளன. ஒரும் ஐம்பொறி. (சிவகசிந்தாமணி, 377) ஒரும் வையத்து. (சீவகசிந்தாமணி, 888) இவை ஈண்டு எண்ண வுரியன. உயிர்க்கு உறுதி என உயர்ந்தோர் ஒ ர் ங் த உணர்ந்துள்ள அறத்தை உரிமையுடன் செப்து கொள்பவனே அதிசய பாக்கியவாளுகின்ருன்; அவ் வாறு செய்யாதவன் தனக்கே வெப்ய துயரங்களே விக்ளத்துக் கொள்ளுகிருன். துன்பம் நேராமல் இன்பம் சேருக. சிறந்த மனிதன் என வந்துள்ள ஒருவன் விரைந்து செய்யத் தக்கது. அறமே; வெறுத்துக் கள்ளவுரியது பாவமே என்பதாம். விதியும் விலக்கும் ஒருங்கே மதி தெளிய வந்தன. உயல் பாலது = ஒழிக்க வுரியது. உயல் என்பது கப்புதல், பிழைத்தல்களே உணர்த்திவரும். உயிர் துயர்நீங்கி உயர்வாஉப்ய விரும்பின் பழியைச் செய்யலாகாது. பிழையின்றிச் சுகமாய்ப் பிழைக்கவுரிய வழி பழிபடியாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள் கலேயாம். உய்யும் வழியை உணர்த்துங்கால் உயல் இவ் வாறு ஊடேறி வந்து தனது செயல்கிலேயைத் தெளித்துகின்றது. உயல் ஆற்ரு உய்வு இல் நோய். (குறள், 1174) இன்பப் பாவிலும் பின்பு இவ்வாறு வந்துள்ளது. இதில் உயல் உணர்த்தி நிற்கும் பொருளே உணர்க. உய்யா வரு நோய்க்கு உயல் ஆகும். (கலி, 139) இதன் கண்ணும் உயல் வங் கள்ளது. செயலும் உயலும் சேர்ந்து தோன்றி இயல் கிலைகளை இனிது விளக்கி நின்றன. செயலுக்கு அயலானதை அயல்பாலது என்று கூறியிருங் தால் பொருள் எளிதே தெளிவாய்க் கெரிந்திருக்கும். அறம் செய்வதாலும் மறம் செய்யாமையாலும் உயிர் உப்தி பெறுகி றது. அந்த உய்வு நிலை ஒருங்கே ஒர்க் து உணர சேர்ந்தது. மேலே அறம் என்றதற்கு எற்ப மறம் என்று கீழே கூறி யிருக்க வேண்டும்; அங்கனம் கூறவில்லை; பழி என்று குறித் துள்ளார். பாவத்தின் முளை பழி. உலகம் எள்ளி இகழுகிற சிறு பிழைகளையும் செய்ய லாகாது என்பார் பழி என்ருர்,