பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 233 மெய்ம்மைகற் பொறைவெங் கொலைசெயாது ஒழுகல், மேவும்.எக் கரணமும் அடக்கல், செம்மைசேர் துாய்மை வரைவுரு தளித்தல், சிற்றம்,நீங் குதல் கள வின்மை அம்மவென்று எவரும் அாற்றுதல் பரியா அருள்செயல் ஆய ஒன்பானும் வம்மென அமரர் எதிர்புகுந்து அழைப்ப வானிடை விடுத்த துாதுஆமால். (காசிகாண்டம்) இல்வாழ்க்கையை நெறியே நடக்காகவன் பகடி என்று இழிக்கப்படுகிருன்; வாழ்வாங்கு வாழ்பவன் மனித உருவில் மரு வினும் தேவனுப்த் திகழ்கிருன் என இவை துலக்கியிருக்கின்றன. இவ் வுலகில் நெறிமுறையே இல்வாழ்பவன் வானுலகில் வாழும் தெய்வா மதித்துப் போற்றப் பெறுவான் என்பதாம். துறந்தார் முதலியோரைப் பேணி கியமமா மனைவாழ்க்கை நடத்தி வருவது நலம் என்ருர்; அவ்வாறு வரின் அகனல் வரும் பயன் யாது? என்பாருக்கு இவ்வாறு தெய்வம் ஆவாய் என்று தெளிய விளக்கினர். தகுதியான ஊதியம் தெரிந்தால் அக் காரி யத்தில் மிகுதியான ஆர்வமும் ஊக்கமும் தோன்றும் ஆதலால் அந்த மானச மருமம் இங்கே நன்கு தெரிய வக்கது. நல்ல ஒழுக்கமுடையவனப் இல்வாழ்பவனுக்குப் புகழும் புண்ணியமும் உளவாகின்றன; ஆகவே இம்மையில் தெய்வமா மதிக்கப்படுகிருன்; மறுமையில் தேவனப்ச் சிறந்து திகழ்கிருன். மனிதன் தேவன் ஆக வேண்டுமானல் அவன் புனிதனப் மனைவாழ்க்கை இனிது புரிய வேண்டும் என்பது அறிய கின்றது. வாழ்வாங்கு வாழ்பவன் வையத்தானே ன னினும் வானத் கானப் வயங்கி நிற்கிருன். வாழ்வில் சீலமுடையானே ஞாலம் தெய்வமா வாழ்த்தி வருகிறது; வானவரும் அவனைப் போற்றி வருகின்ருர். இவ்வுண்மை திருவள்ளுவர்பால் தெரிய கின்றது. ச ரி த ம். இவர் மயிலாப்பூரில் இருந்தவர். இவருடைய தாயின் பெயர் ஆகி; கங்தை பெயர் பகவன் இவர் அரிய கலைகள் பலவும் கெளிக்கவர்; தத்துவ ஞானி; வித்தக மதியூகி, வாசுகி என்னும் "30