பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 313 அரிய விலையுடைய பெரிய மணி அணிகள் புனேக்க அரசர் ஆடம்பரமாயிருக்தாலும் யாதும் அணியாக புலவருக்கு ஒப்பு ஆகார் எனச் சிவ ப் பி ர காசர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். கருத்தைத் தெளிவா விளக்குதற்கு இதில் இணைத்திருக்கும் உவமை சுவை மிக வுடையது; கூர்ந்து ஒர்ந்து சிக்திக்க வுரியது. வயிர மோதிரம் அணிந்திருந்தாலும் கைவிரல் கண்ணுக்கு நிகர் ஆகுமா? என்று காட்டியிருக்கும் காட்சி கருதி உணரத் தக்கது. இத்தகைய கண் அனைய கல்வியைத் தன் மகனுக்குக் தந்தை தரவில்லை ஆளுல் அவனைக் குருடனுக்கி விட்ட கொடிய பழிகாானகிருன். ஆகவே இழிவடைக்க கழிவாய்த் தாழ்கிருன். மாதா சத்ரு: பிதா வைரீ யோ பாலோ பாடித: ா சோபதே ஸ்பாமத்யே ஹமஸ்மத்யே பகோ யதா. அன்னங்கள் இடையே கொக்கைப் போல் கற்றவர் கூடிய அவையிடையே கல்லாதவன் இழிந்து கிற்கின்ருன்; ஆதலால் தம் பிள்ளைகளைப் படிப்பிக்காத தாயும் தந்தையும் அச்சேப் களுக்குப் பொல்லாத பகைவர்களே என இதி குறித்துள்ளது. மக்களேக் கல்லா வளரவிடில் தீது, (நான்மணிக்கடிகை) கல்வியறிவை ஊட்டாமல் பிள்ளைகளை வினே வளர்த்து வருவது பொல்லாத தீமையாம் என விளம்பிநாகனர் இங்கனம் விளம்பியுள்ளார். கலே படியா மகன் புலைபடிதலால் நிலை தெரிக. "எள்ளி இழிவுற எவ்வழி ஏறினும் ஈனமதாய்த் i. தள்ளித் தவிப்பது கல்விகல்லாத தளர்வினன்ருேம் துள்ளித் துடித்து விளேயாடும் போது துடிஅடக்கிப் பள்ளிக்கு வைத்தான் இலேயே பிதாவாகிய பாதகனே." இளமையில் கல்லாமல் வளர்ந்த ஒரு மகன் பெரியவன் ஆனபின் தனது இழிநிலையை உணர்க்க உளம் மிக கொர்து துயர் அடைந்து உரைத்தபடியிது. கல்வியறிவை ஊட்டாவிடின் தே மகனது பரிதாப நிலையை இது நன்கு காட்டி யிருக்கிறது. தம் பொருள் ஆன கம் மக்களுக்குத் தந்தையர் கல்விப் பொருளையே கவனமாக் கருதல் வேண்டும்; இது இல்லாமல் வேறு செல்வப் பொருளை ஈட்டி வைத்தால், அது அவரைப் பொல்லாக பழிகளில் ஆழ்த்தி அல்லல்களை விளைத்த அழி திய ரங்களையே எ வ்வழியும் நீட்டி அவலப்படுத்திக் கெடுத்தி விடும். 40