பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 திருக்குறட் குமரேச வெண்பா இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டுத் துடைப்படு தும்ன்பமாலைச் சுயோதனன் சூழ்ச்சியாக மடைப்படு விதியிற் செய்த விருந்தில்ை மருண்டவற்கே படைப்படு சேனேயோடும் படைத்துனே யாயிஞனே. [2 (பாரதம், படைஎழுச்சி, 16-17) மத்திரபதியை மித்திர பேதமா வசப்படுத்தித் துரியோதனன் செய்துள்ள விசித்திர சதியை இவை விளக்கியுள்ளன. மதி மோசமா உண்டுவிட்டோம் என்று இம் மன்னன் மறுகி அவ லுக்கே உரிமையாய் கின்று உதவி புரிந்துள்ளான். வஞ்சமா சேர்க்கதையும் நன்றி என்று நினைந்த இவன் நெஞ்சம் உருகி யிருக்கிருன் இவனது நன்றியறிதலை வியந்து எ ல்லாரும் உள்ளம் இரங்கினர். அயர்ந்த புலையிலும் இவன் உயர்க்ககிலேஒளிவிசியது. சுயோதனன் சூழ்ச்சியால் செப்த சிறியதையும் பெரிய உதவியாக் கருதித் தனது சேனைகளோடு கன் உயிரையும் அவனுக்கு இவன் உதவி யருளியக உயர்ந்த பெருக்ககைமை யாப் ஓங்கி கின்றது. செய்ங்கன்றி அறிகலில் இவ்வேந்தனுடைய செயல் அதிசய கிலேயாப் ஓங்கியுள்ளமையால் மாந்தர் யாவரும் துதிசெப்த புகழ்ச்தனர். நூல்களும் போற்றி யுள்ளன. வஞ்சத்தால் செய்த சிறுகன்றும் வானளவின் எஞ்சா தென மறவா கின்னுயிரும் ஈபவே விஞ்சு பயனறிந்த மேலோர் விழுச்சான்று மஞ்சார்கை மத்திரத்தார் மன். (இன்னிசை) இவ்வுத்தமன் நீர்மையை இவ்வாறு பலரும் போற்றியுள்ள னர். மத்திரத்தார்மன் சன்றது மத்திர தேசத்து மன்னன் ஆன் சல்லியன. உள்ளம் உயர்க்க பெருந்தன்மைக்கு இவனுடைய நன்றியறிவு என்றும் பெரிய சான்ருப் கின்று நிலவுகின்றது. Gratitude is the sign of noble souls. [Aesop] செப்ான்றியறிவது சிறந்த மேலோரின் மெய்யடையாளம்' என்னும் இது இங்கே கன்கு அறியவுரியது. நன்றி மறந்தவன் சன்மைகளை எல்லாம் இழந்தவனகிருன்; ஆகவே அவன் பழி பாதகளுயிழிகிருன். அந்த இழிவால் வழி