பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 517 திருதராட்டிரரின் தகவின்மையையும் அவர் பெற்ற மக்களைக் கொண்டே உலகம் ஏன் நேரே கண்டது? எனின், தக்கார் தகவு இலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்க. தக்கவரை அறிதற்குத் தகுதியான கருவியை இது மருவி யுளது. தகவில்லாரையும் கழுவியது இருவகையும் தெளிவுற. தக்கார் = தகுதியை யுடையவர்.தகுதி என்பது நடுவுநிலைமை என முதலில் குறிக்கார். அக்கப் பண்பு உடையவர் தக்கார் என இங்கே நன்கு விரித்து விளக்கினர் குறிப்பைக் கூர்ந்து உணர்க. நேர்மை முதலிய நல்ல நீர்மைகள் உடையவர் மக்களுள் தக்கவர் என மிக்க மேன்மையோடு உயர்ந்து வருகிருர்; அத் தகைய இயல்பு இல்லாதவர் தகவிலர் என இழிந்து கிற்கின் ருர். தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்ர்ேமை எக்காலும் குன்றல் இலராவர்-அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு. (நாலடியார், 1.12) கக்கார் கரும்பின் கட்டிபோல் இனியவர்; தகவிலார் வேம் பின் பட்டைபோல் கசப்பானவர் என இது காட்டியுள்ளது. நல்ல தன்மையை இழக்க பொழுது அங்க மனிதன் பொல்லாத புன்மையனப் இழிந்து எவ்வழியும் பழிபடிந்து புலையுறுகின்ருன். தக்கோர் உறையும் தாபதப் பள்ளி. (பெங்கதை, 2-12) தக்கார் எத்தகையர்? எவ்வளவு செவ்வியர்? எத்தனை உயர்வினர் என்பதை இதில் உய்த்துணர்ந்த கொள்ளுகிருேம். உருவம் சொல் செயல் முதலிய நிலைகளில் மனிதர் ஒரு கிக ராப் உலகில் உலாவி வருகின்றனர். இவருள் தக்கார் இவர்;தகா தார். இவர், என்று இனம் தெரிந்து கொள்வது எப்படி? என இப்படி ஒரு கேள்விக்கு இதில் செப்பமாப் விடை வந்துள்ளது. தக்காரையும் தகவில்லாரையும் அவரவருடைய மக்களால் னேரே தெளிவாய்க் கண்டு கொள்ளலாம் என்பதாம். எச்சம் என்றது மக்களே. ஒரு மனிதனுக்குப் பின் எஞ்சி கிற்பவர் அவனுடைய பிள்ளைகளே ஆதலால் அவர் எச்சம் என சேர்ந்தார். கால் முளை என்பதும் இங்கே கருதிக் காணவுரியது.