பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 திருக்குறட் குமரேச வெண்பா நேரும்; அது குறையவே வாழ்வு தேயுமே! வறுமைகண்ணுமே! உலகம் தாழ்வாக எண்ணுமே! என இவ்வாறு மறுகுவாயை நோக்கித் தேவர் இதனை இங்ங்னம் அருளி யிருக்கிரு.ர். உலகம் வையாது=வையத்தார் தாழ்வாக எண்ணுர்.தாழ்வை இகழ்ந்த பழியார்; புகழ்ந்த போற்றவர்; உவந்து உதவுவர் என்பது வையாது என்னும் சொல்லில் மருமமா மருவியுளது. தாழ்வு என்றது. வறுமையை. பொருள் வளம் வாழ்வின் உயர்வு ஆதலால் அது குறைந்த போது தாழ்வு என வந்தது. செம்மையாக நன்மையின் கண்ணே கிலேத்து நிற்பவனது தாழ்வை உலகத்தார் கேடாக கினையார்; பெரிய வாழ்வாகவே கருதுவர். நேர்மை நிலையில் சீர்மை நிலைத்து வருகிறது. உள்ளம் கோடாத நல்லவர்களுக்கு அல்லல்கள் உளவாகா; ஒருவேளை பழவினை விளைவால் பொருள் அழிவுமுதலிய தாழ்வுகள் கேரின் அவற்றை மாந்தர் கேடாக எண்ணுர்; நிலை குலையாமல் நெறியே கின்ற புண்ணிய சிலர் என்றே அவரை எண்ணி ஏத்து வர். தகுதியாளர் எவ்வழியும் தக்கவராகவே திகழ்கின்ருர். வெளியே வாழ்வில் சேருகின்ற கேடு கேடாகாது; உள்ளம் கோடுதலே கொடியகேடாம்; அது நேராமல் எவ்வழியும் செவ் வையாக் காத்து வரவேண்டும். அவ்வாறுவரின் அந்த மனிதன் எந்தகிலையிலும் உயர்ந்து யாண்டும் நீண்டமேன்மைபெறுகிருன். சிறுமையான வறுமையும் நடுவுநிலைமை யாளரை மருவின் பெருமை அடைகிறது. செப்பம் எவரையும் எவ்வகையிலும் தாழ்த்தாமல் அற்புத நிலையில் உயர்த்தி அருள் புரிந்து வருகிறது. இணர்ஓங்கி வந்தாரை என்னுற்ற கண்ணும் உணர்பவர் அஃதே உணர் ப-உணர்வார்க் கணிமலே நாட! அளருடிக் கண்ணும் மணி மணியாகி விடும். (பழமொழி) சேறு சூழ் ந்தாலும் வயிரமணியை எவரும் போற்றிக்கொள் வர்; தாழ்வு நேர்ந்தாலும் செவ்விய சன்மையாளரை யாவரும் புகழ்ந்து போற்றுவர் என இது குறித்துள்ளது. கோடாதான் கேடு கேடாகாமல் யாண்டும் பீடும் பெருமையுமாகிறது. கரும நெறியில் தங்கி வருபவர் வறுமையுற நேரினும் வையம்