பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 திருக்குறட் குமரேச வெண்பா மனிதரைத் தெய்வங்கள் ஆக்குகிறது’ என்னும் இது இங்கே அறிய வுரியது. அடக்கம் அமரர் ஆக்கும் என்றதும் கோக்குக. பணிவு இனிய நீர்மை ஆகலால் அதனையுடைய மனிதர் அரிய பல சீர்மைகளை எளிதே அடைந்த கொள்ளுகின்றனர். Humbleness is always grace; always dignity. (J. R., Lowell) "பணிவு என்றும் திவ்விய அணியாய் யாண்டும் மேன்மை தருகிறத' என இது குறித் தள்ளது. அடங்கி ஒழுகும் பண்பை எந்த நாடும் விழுமிய மேன்மையா வியந்து புகழ்ந்து வருகிறது. பணிவும் அமைதியும் அடக்கத்தின் மணங்களாய் மருவி யுள்ளன. இந்த இனிய குணங்கள் அரிய மேன்மைகண் அருளு கின்றன. சிவர்களை உயர்த் தவது திவ்விய நீர்மையாம். இழி.குலத்தோர் ஆயினும்தம் இயல் அடக்கம் உயர்குலத்தில் ஏற்றும்; யே பழியகற்றும் புகழ்பெருக்கும்; பண்புகண்பு மிகவிளேக்கும்; பைம்பொன் ட்ைடின் வழிபுகுத்தும் என்றினேய பிறவுமித முறப்பகர்ந்து மருந்தால் பித்தர் கழிமதத்தை அடக்குதல்போல் கற்குணஞ்சிற் சிலர்க்குவரக் கற்பித்தாரால் (மெய்ஞ்ஞானவிளக்கம்) அடக்கத்தால் வினையும் மகிமைகளே இது நன்கு விளக்கியுளது. இந்த அடக்கம் பணிவுடைமையால் மிகவும் உயர்வடைகிறது. Self-control is promoted by humility. [Sigourney] பணிவால் தன்னடக்கம் ஆயர்கிறத என இது உரைத் தளது. Humility that low sweet root, From which all heavenly virtues shoot. [Moore) பணிவு இனிய மூல முதல்; அதிலிருக்க திவ்வியமான கரும குணங்கள் எல்லாம் வளமா விளைந்து வருகின்றன’’ É7TÉ, II" இது மொழிக் தளது. உயர் நலங்கள் பணிவால் உளவாகின்றன. பணிவுடைமையால் செல்வர் சீரோடு சிறக்க புண்ணிய வான்களா உயர்ந்து யாண்டும் கண்ணியமாய் விளங்குகின்ருர், இவ்வுண்மை கண்ணனிடமும், வளவன் பாலும் அறிய கின்றது.