பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கமுடைமை 569 180. புற்ருேங்க ஏனே பொறியடங்கி வால்மீகர் குற்றமற கின்ருர் குமரேசா-உற்ற ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. (சு) இ-ள். குமரேசா ஐம்பொறிகளையும் அடக்கி யிருக்க வால்மீகர் வன் இன்பம் மிகப் பெற்ருர்? எனின், ஆமைபோல் ஒருமையுள் ஐக்க அடக்கல் ஆற்றின் எழுமையும் எமாப்பு உடைத்து என்க. பணிவுடைமை செல்வர்க்கு ஒரு பெரிய செல்வம் என்று முன்பு கூறினர்; இதில், அரிய துறவிகட்கு உரிய அடக்கம் கூறுகின்ருர். புலன் அடக்கம் புனித தவம் ஆகிறது. ஐந்து என்றது ஐம்பொறிகளே. மெய், வாப், கண், மூக்கு, செவி என்னும் இந்த ஐக்கம் உடல்வாழ் உயிர்க்கு உரிய அறி கருவிகளாய் அமைந்துள்ளமையால் பொறிகள் என வந்தன. இவற்றை நெறியே அடக்கினவன் அரிய பெரிய மேன்மைகளை எளிதே அடைந்த கொள்ளுகிருன் ஆற்றின் என்ற த அவ்வாறு அடக்குவது அரிய செயல் என்பது கெரிய கின்றது. அரியதைச் செய்த முடிப்பவர் பெரியவர் எனப் பேர் பெற்ற வருகின்ருர். ஒருபிறவியுள் ஐம்பொறிகளையும் ஆமைபோல் ஒருவன் அடக்க வல்லவனுயின் ஏழு பிறவிகளினும் அவனுக்கு அ.த இன் பம் உடையதாம். துன்பப் பிறவிகளை அடக்கம் இன்பமாக்கும். ஐந்தின் அடக்கத்தை நேரே காட்சியால் காண ஆமை உவ மையாய் வந்தது. கலை ஒன்று, கால்கள் சான்கு ஆக ஐக்க உறுப்புகள் அந்த நீர்வாழ் பிராணியிடம் சீரா அமைந்துள்ளன. வேண்டிய பொழுது அவற்றை வெளியே விரிக்க நீட்டவும், வேண்டாக வழி உடலுள் சுருக்கிக் கொள்ளவும் அது வல்லதா யுள்ளது. அதுபோல் செவி வாய்முதலிய ஐம்பொறிகளையும் தீய வழிகளில் செல்ல ஒட்டாமல் மடக்கி நல்ல நெறிகளில் அடக்கி ஒருவன் ஒழுகிவரின் அவன் விழுமிய த வ ம் உடையவன் ஆகிருன்; ஆகவே அவனது உயிர் புனிதம் உடையதாய்ப் பிறவி கள் தோறும் பெரிய இன்பங்களை அடைகிறது. அந்த இனிய உறுதியான இன்ப நிலையை ஒரளவு தெளிவாக் கெரிக்க எவ்வழி யும் நேரா ஒழுகி உயர எழுமையும் எமாப்பு உடைத்து என்ருர், 72